தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்படுகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
https://www.youtube.com/watch?v=8-tetkyGJM8
மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், பாலிவுட்டில் மதரீதியான பாகுபாடுகள் நிறைய இருக்கிறது. முஸ்லிம் என்பதால் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், பாலிவுட் சினிமா பற்றி தவறாகவும் பேசி இருந்தார். இதை அடுத்து பலருமே ஏ.ஆர் ரகுமானை விமர்சித்து இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் போட்ட பதிவில், ஏ ஆர் ரகுமான் ஒரு முஸ்லிம். இந்தியாவில் அவர் அடைந்துள்ள புகழ் ஈடு இணையற்றது.
ஏ ஆர் ரகுமான் பேட்டி:
புகழ் பெற்றவர்களும் பணக்காரர்களும் எந்த சூழலிலும் பிரச்சனைகளை எதிர்கொள்வதே கிடையாது.
பிரச்சனை என்பது என்னை போன்ற ஏழை எளியவர்களுக்கு தான் வருகிறது. நான் இந்த நாட்டினுடைய குடிமகன் கிடையாது. ஆனால், இந்தியாவில் பிறந்த பலரை விடவும் நான் இந்த நாட்டை ரொம்ப அதிகமாக நேசிக்கிறேன். எனக்கு ஓட்டு உரிமை இல்லை என்றாலும் என்னுடைய கொள்கைகளுக்காக போராடிக் கொண்டு இந்த மண்ணில் வாழ்கிறேன்.
http://youtube.com/watch?v=Nb3jm4ASZis
பாலிவுட் சர்ச்சை
முஸ்லிமாக இருப்பதால் பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுப்பதாக ரகுமான் கூறியிருந்தார். ஆனால், பாலிவுட்டில் இருக்கும் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் எல்லோருமே முஸ்லிம் தான். அவர்கள் எல்லோருமே சூப்பர் ஸ்டார் களாக இருக்கிறார்கள். ஏ ஆர் ரகுமான் தன்னை ஒரு பரிதாபத்திற்குரியவராக காட்டிக் கொள்வது அவருக்கு பொருத்தமானது கிடையாது என்றெல்லாம் கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=1A6LcCizG94
ரகுமான் விளக்கம்:
இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஏ.ஆர் ரகுமான், யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது. இந்தியனாக இருப்பதை ஆசிர்வதிக்கப்பட்டவதாக கருதுகிறேன். இசையின் மூலம் சேவை செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். நான் யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தவில்லை என்றெல்லாம் கூறியிருந்தார்.





