பத்து தல பாடலை troll செய்த விக்கல்ஸ் – சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

0
1317
ARRahman
- Advertisement -

பிரமாண்ட படங்கள், பாடல்களுக்கு நடுவே, தீடிர் தீடிர் என சில காமெடி வீடியோக்கள் டரன்டிங்காவது வழக்கமாக ஆகிவிட்டது. அந்த வகையில் விக்கல்ஸ் யூடியூபினர் செம்ம நக்கல் அடித்து வெளியிட்ட ‘வாலி’ படத்தின் ‘நிலவைக் கொண்டு வா’ ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் படு பிரபலமானது. இந்த வீடியோவை பார்த்து ட்விட்டர் எஸ் ஜே சூர்யா கூட பாராட்டி தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

அதே போல இந்த பாடலை பாடிய உன்னி கிருஷ்ணன் கூட பாராட்டி இருந்தார் அதில் `நிலவைக் கொண்டு வா’ இன்ஸ்டா ரீல்ஸை எனக்கும் அனுப்பினார்கள்.இன்ஸ்டா ரீல்ஸை அழகா பண்ணிருக்காங்க. தேவாவின் இசைக்கும், அனுராதா ஶ்ரீராம் – உன்னிகிருஷ்ணன் துள்ளல் குரல்களுக்கு நிலாவே துள்ளிக்குதித்து வந்து டூயட் ஆடும் அளவுக்கு பாடியிருந்தார்கள். அதைப் பார்த்ததும் சந்தோஷமா சிரிச்சி ரசிச்சேன் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

வாரிசு படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலை கூட ரீல்ஸ் செய்து இருந்தனர். அந்த வீடியோவை பற்றி தான் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசி இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து விக்கல்ஸ் குழுவினரும் தங்கள் ரசிகர்களுக்கும் விஜய்க்கும் நன்றி தெரிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் இவர்கள் கேலி செய்து வெளியிட்ட தன்னுடைய பாடலையே மீண்டும் இமிடேட் செய்து இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.

சிம்பு நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த திரைப்படம் கன்னடத்தில் சிவராஜ் ராஜ்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த மஃப்டி படத்தின் ரீ-மேக் என்பதும் குறிபிடத்தக்கது. தமிழில் இந்த படத்தை ஒபலி என்.கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக அக்கறையில பாடலும் ராவடி பாடலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் ராவடி பாடலில் சயீஷா நடனமாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த பாடலையும் விக்கல்ஸ் கலாய்த்து இருந்தனர்.

இந்நிலையில் ‘பத்து தல’ படத்தில் இடம்பெற்ற ராவடி பாடலை ரசிகர்கள் ஜாலியாக ட்ரோல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடகர் சுபா மற்றும் பாடலாசிரியர் சினேகனுடன் ரீ-க்ரியேட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement