தேசிய மகளீர் ஆணையத்தில் இருந்து கொண்டு இப்படி பேசலாமா ? – குஷ்பூ மீது பரபரப்பு புகார்.

0
1367
Kushboo
- Advertisement -

அடுத்து வீட்டு குடும்ப பெண்களை வம்பிழுத்த நடிகை குஷ்பூ எழுந்து இருக்கும் புகார் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடிகை குஷ்பு குறித்து திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூராக பேசியிருந்தார். இதற்கு நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பு அவர்கள் கண்டித்து பதிவு போட்டிருந்தார். பின் குஷ்பு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதற்கு அதில் அவர், திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்னை பற்றி அவதூறாக பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் அத்தனை பேரிடமும் அவர்களே சொல்கிறேன். குஷ்பூவை சீண்டி பார்க்காதீர்கள். ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கிறது. குஷ்பு பதிலடி கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது. இது போன்ற பேச்சாளர்களை கதவுக்கு பின்னால் பார்த்துவிட்டு ஸ்டாலின் ரசிக்கிறார். தேசிய மகளிர் ஆணையம் மூலமாக திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க திமுக எந்த ஆணுக்கும் பெண்களைப் பற்றி அவதூறாக பேச உரிமை இல்லை.

- Advertisement -

குஷ்பூ அளித்த பேட்டி:

கைத்தட்டலுக்காக பெண்களை அசிங்கமாக பேசுகிறீர்கள். யார் பெண்களைப் பற்றி அவதூறாக பேசினாலும் அது தங்கள் தாய் தந்தையை அவதூறாக பேசுவதற்கு சமம். எல்லா ஆண்களிடமும் நான் கேட்கும் கேள்வி ஒன்று தான். பெண்ணை அவதூறாக கேள்வி உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது? நான் உட்கார்ந்து அடிப்பேன். ஒரு பெண்ணை இழிவாக பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். கடந்த முறை மன்னிப்பு கேட்டதால் நான் அப்படியே விட்டுவிட்டேன். வேறு நபராக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பேன். செருப்பால் அடிக்கும் தைரியம் எனக்கு இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இப்படி ஆவேசமாக குஷ்பு அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்ததாக திமுக தலைமை கழகம் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இது தொடர்பாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவிடம் பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த விவகாரத்தில் குஷ்புக்கு ஆதராகவும் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பதிவாகி இருக்கின்றது. இந்த நிலையில் வீட்டு பெண்களை குஷ்பூ வம்புக்கு இழுத்து இருக்கிறார் என்ற புதிய சிக்கலில் மாட்டியிருக்கிறார்.

-விளம்பரம்-

குஷ்பூ டீவ்ட்:

அதாவது, கடந்த ஜூன் 15ஆம் தேதி குஷ்பூ டீவ்ட்டர் பக்கத்தில் தன்னுடைய கணவரும் பிரபல இயக்குனருமான சுந்தர்சியின் படங்களை பதிவிட்டு, நான் 25 ஆண்டுகளுக்கு முன் காதலில் விழுந்த முகம். என் இதயத்தை இன்னும் படபடக்க வைக்கிறார் இந்த மனிதர் என்று பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ஜெய்சங்கர் கெனாத் என்பவர் இந்த மனிதரின் பணத்தை பாதுகாக்க நீங்கள் பாஜகவுக்கு சென்றீர்கள் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த குஷ்பு கோபமாக நீங்கள் வேண்டும் ஆனால் உங்கள் தொழிலை பாதுகாப்பதற்காக உங்கள் வீட்டின் பெண்களை பயன்படுத்துபவராக இருக்கலாம். வெட்கம் கெட்டவர்கள் என்று பதிவிட்டிருந்தார்.

குஷ்பூ மீது புகார்:

தற்போது இதைதான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாக்கி வருகிறார்கள். பிற வீட்டுப் பெண்களை விமர்சனம் செய்வது நியாயமா? ஒரு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து கொண்டு இப்படி எல்லாம் செய்யலாமா? என்று கேள்வி எழுப்பிடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகை குஷ்பூ மீது திருநெல்வேலி மாநகர போலீஸில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஜெய்சங்கர் வீட்டுப் பெண்கள் தாங்க முடியாத மனவேதனையும் அவமானமும் அடைந்திருக்கிறார்கள்.

ஆகவே குஷ்பூ மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், தன் மீது சுயமதப்பட்டுள்ள விமர்சனம் குறித்து பதில் அளித்துள்ள குஷ்பூ ”என்னை எதிர் கொள்ள தைரியம் இல்லாதவர்கள் விவாதத்தின் போது என்னுடைய குடும்பத்தை இருக்கிறார்கள் இது எப்போதும் ஒரு வழி பாதை கிடையாது விதிகள் மிகவும் எளிமையானவை தேவையில்லாமல் நீங்கள் என் குடும்பத்தை இழுத்தால் நான் உங்கள் குடும்பத்தை இழுப்பேன்” என்று விளக்கமளித்துள்ளார்.

Advertisement