உடல் நிலை சரியில்லாமல் போனதால் விவசாயத்தில் கவனம் செலுத்திய ரஹ்மானின் அக்கா – இப்படி ஒரு பின்னனியா.

0
362
rihana
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடதொடங்கினார் ரகுமான் . தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் என்று குறிப்பிடத்தக்கது. பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர். தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், அமைதியான சுபாவம் கொண்ட ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் அனைவரையும் பேச வைத்தார். மேலும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார் ஏ ஆர் ரஹ்மான். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றி இருக்கிறார். இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார். இது ஒரு பக்கமிருக்க, ஏ ஆர் ரகுமான் சென்னையில் பிறந்தவர். அருணாச்சலம் சேகர் திலீப்குமார் என்பது இவருடைய இயற்பெயர். அம்மா பெயர் கஸ்தூரி. இவர் முஸ்லிமாக மாறியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ரகுமானின் அக்கா பெயர் ஏ ஆர் ரெய்ஹானா.

ஏ ஆர் ரகுமான் உடைய அக்கா குறித்த வீடியோ:

-விளம்பரம்-

இவருடைய மகன் தான் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருக்கும் ஜிவி பிரகாஷ் ஆவார். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் உடைய அக்கா ஏ ஆர் ரெய்ஹானா உடைய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் அவர் ரகுமான் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு சிறு வயதிலிருந்தே தோட்டக்கலையில் அதிக ஆர்வம் இருந்தது. அது மட்டுமில்லாமல் உடம்பு சரியில்லாத போது மருத்துவர் ஆர்கானிக் உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். அதனால் நான் ஆர்கானிக் உணவுகளை தேட ஆரம்பித்தேன்.

தோட்டம் வைக்க காரணம்:

அதற்கு பிறகு தான் ஆர்கானிக் உணவுகளை தயாரிக்க தோட்டத்தை உருவாக்கினேன். இதற்கென்றே நான் தனியாக நிலம் வாங்கி தோட்டத்தை உருவாக்கினேன். என்னுடைய தோட்டத்தில் மாம்பழம், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா போன்ற பல பழவகைகள், பூக்கள், காய்கறிகள் என்று எல்லாமே வைத்திருக்கிறேன். அதிகம் என்னுடைய தோட்டத்தில் பழ வகைகளும், பூக்களும் தான் உள்ளது. காய்கறி வகைகள் இன்னும் அதிகமாக போடவில்லை. இனிமேல் பண்ணுவேன். மேலும், என்னுடைய தோட்டத்தில் செயற்கை உரங்கள் எதுவும் போடுவதில்லை. இயற்கை உரம் மட்டும்தான். மழைநீர், நாங்கள் விடும் தண்ணீர், ஆட்டு உரம்,மாட்டு உரம் என்று இந்த மாதிரியான உரங்கள் தான் போடுவோமே தவிர வேறு எந்த செயற்கை உரங்களையும் போடுவதில்லை.

ஏ.ஆர்.ரகுமான் தோட்டம் பற்றிய தகவல்:

மேலும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் இயற்கை தாவரங்கள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். அவரும் தோட்டம் வைத்திருக்கிறார். ஆனால், அவரால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. ஏனென்றால், அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார். அவர் வீட்டில் விளைந்து வரும் காய்கறிகளை தான் நான் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் வீட்டில் இருக்கும் ஒரு வகை மாம்பழம் வகை மிக சுவையாக இருக்கும். அதை உனக்கு எனக்கு என்று பலரும் டிமாண்ட் வைப்பார்கள். என்னுடைய மகன் ஜிவி பிரகாஷ்க்கு தோட்டம் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கிறது. அதே போல் அவருக்கு கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் உண்டு. இன்னும் நிறைய மரக்கன்றுகளையும், செடிகளையும், காய்கறிகளையும் பக்கத்து தோட்டத்தில் நட்டு இருக்கிறேன் என்று தன்னுடைய தோட்டம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement