மைக்கேல் ஜாக்சன் குறித்து ஏ ஆர் ரகுமான் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் சங்கர். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகியிருந்த படம் எந்திரன்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ், தேவதர்ஷினி, டெல்லி குமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். ரோபோவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் செய்து தந்திருந்தது. அதோட இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்து இருந்தார். ஒவ்வொரு பாடல்களுமே இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு தான் வருகிறது.
ஏ ஆர் ரகுமான் பேட்டி:
இந்தப் படத்தினுடைய வெற்றிக்கு ஏ ஆர் ரகுமானின் இசையும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், கடந்த 2009-ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை சந்திக்க அவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் ரொம்ப அன்பானவர். நாங்கள் ரெண்டு பேருமே இசை குறித்தும், உலக அமைதி குறித்தும் நிறைய விஷயம் பேசியிருந்தோம். அதற்குப் பின் அவர், குழந்தைகளை அழைத்து எனக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
மைக்கல் ஜாக்சன் குறித்து சொன்னது:
அது ரொம்ப மறக்க முடியாத நினைவுகள். அதற்கு பின் நான் இந்தியா திரும்பினேன். பின் நான் இயக்குனர் சங்கரை சந்தித்தேன். அப்போது அவர், எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சன் பாடினால் எப்படி இருக்கும் என்று சொன்னார். நானும் சூப்பர் ஐடியா நன்றாக இருக்கும். ஆனால், அவர் தமிழில் பாடுவாரா? என்றேன். அதற்கு அவர், நீங்கள் என்ன சொன்னாலும் அவர் செய்ய தயாராக இருக்கிறார் என்று சொன்னார். இதனால் அடுத்தகட்ட வேலைகள் எல்லாம் செய்யத் தொடங்கினோம்.
ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல்:
கிட்டத்தட்ட மைக்கேல் ஜாக்சன் தான் எந்திரன் படத்தில் பாட இருந்தார். ஆனால், அந்த ஆண்டு தான் அவர் எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். அவருடைய இறப்பு இந்த உலகில் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியிருந்தது என்று கூறியிருக்கிறார். உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். இவர் குறுகிய காலத்திலேயே பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.
ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:
இவருடைய இசைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மேலும், இவர் தன்னுடைய இசைக்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கி இந்தியாவிற்கு பெருமையை சேர்த்தவர். தற்போது இவர் ஜீனி, கமல் ஹாசன் 234, சங்கமித்ரா, துருவ் விக்ரம் நடிக்கும் படம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் படங்களைத் தாண்டி பல நாடுகளில் இசைக் கச்சேரிகளை நடத்தி இருக்கிறார்.