தமிழ் மொழிக்காக ரகுமான் செய்த Thug Life சம்பவங்கள் – வைரலாகும் பதிவுகள் இதோ.

0
264
Arrahman
- Advertisement -

சமீபத்தில் மாநிலங்களுக்கு இடையே மக்களை பொருத்தவரை ஆங்கிலம் தான் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து கொண்டு , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது பிற மொழியை தாய் மொழியாக கொண்ட தென்னிந்திய மாநிலங்களுக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , நமது தமிழ் மொழியின் செல்ல பையன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் வழக்கம் போல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த பதிவு ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது போல இருந்தது.

-விளம்பரம்-

தனது சமூக வலைத்தளபக்கங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் பாரதிதாசன் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் கையில் ழகரத்தை ஏந்திக்கொண்டு , கருத்த தேகம் கொண்ட ஒரு பெண் துள்ளிக்குதிப்பது போல படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது .அணங்கு என்றால் தேவைதை குறிக்கும் என்கிறார்கள். அதன்படி , தமிழணங்கு என்பது தமிழ் தேவதை என பொருளாகிறது. இந்த பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் அமித்ஷாவிற்கு கொடுத்த பதிலடி என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வைரலாக ஷேர் செய்து வந்தனர்.

- Advertisement -

இந்த சம்பவம் போல ஏ.ஆர்.ரகுமானின் வேறு சில சம்பவங்களும் உண்டு :-

சம்பவம் -1 :-

2012 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் என்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பாகுபாடு இன்றி அனைத்து அனைத்து மொழிகளில் எடுக்கப்படும் படங்களுக்கு படங்களுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த காமெடி நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த இயக்குனர் என இதுபோன்ற கேட்டகிரியில் விருதுகள் வழங்கப்படும். ஆனால் இவர்கள் பாகுபாடு எல்லாம் பேச்சோடு காற்றில் சென்றது. அந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடிவு வரை இந்தி மொழியிலேயே தொகுத்து வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

குறைந்தபட்சம் அனைவருக்கும் பொதுவான மொழியான ஆங்கில மொழியிலேயாவது தொகுத்து வழங்கியிருக்கலாம். ஆனால் இவர்களின் இந்த செயல் அங்கு இருப்பவர்கள் கண்டுக்காமல் இருந்து விட்டனர். ஆனால் அங்கிருந்து ஏ.ஆர்.ரகுமான் இதையெல்லாம் கண்டு கொண்டுதான் இருந்தார். சிறந்த நடிகருக்கான விருதை அறிவிப்பதற்காக ஏ.ஆர்.ரகுமான் மேடைக்கு அழைத்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று தமிழில் பேசி விருதைய அறிவித்தார். இது அங்கிருந்த தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரையும் அதிர்ச்சி ஆழ்த்தியது இவர்கள் மட்டும் இல்லாமல் அந்த அரங்கத்தில் இருந்த அனைவரும் ஐந்து வினாடிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் இந்த வீடியோக்களை நீங்கள் அதிகமாக இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.

சம்பவம்-2 :-

2014 ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் ரனாக் என்ற ஆல்பம் இசை வெளியீட்டு விழாவில் பாலிவுட்டில் முன்னனி நடிகராக வலம் வரும் சல்மான் கான் சிறப்பு விருந்தினராக வந்தார். ஏ.ஆர்.ரகுமான் சல்மான் கான் மேடையில் ஒன்றாக இருக்கும்போது சல்மான் கான் ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஆவரேஜ் ஆனா இசையமைப்பாளர் தான் என்ன கேல்லியும், கிண்டலாக பேசினார். ஆஸ்கார் விருது வாங்கிய ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய படத்திற்கு எப்போது இசையமைப்பார் என்று கலாய்த்தும் பேசினார். தன் உரையை முடித்த சல்மான் கான் ஏ.ஆர்.ரகுமானிடம் கை கொடுக்க கை நீட்ட ஏ.ஆர்.ரகுமான் தன் இரு கைகளையும் கோட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு கையெல்லாம் கொடுக்க முடியாது போடா என்று என்பது போல் கடைசி வரை கை கொடுக்கவே இல்லை.

சம்பவம்-3 :-

ஏ.ஆர்.ரகுமான் செந்தமாக கதை எழுதி இசையமைத்த படம் தான் 99. இந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்து கொண்டிருந்தது இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென இந்தி மொழியில் பேச தொடங்கி விட்டார் வெடுக்கன தலையை திருப்பி இந்தி….. எனக் கேட்ட ஏ ஆர் ரகுமான் சற்றும் யோசிக்காமல் வேகமாக மேடையை வட்டு இறங்கத் தொடங்கினார். பின்பு சிரித்துக்கொண்டே நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழ் தெரியுமா என்று கேட்டேன் அல்லவா என கூறினார். அடுத்து இதெல்லாம் தமசாக செய்தேன் என்று கூறி நிகழ்சியை ஆரம்பித்தனர்.

சம்பவம்-4 :-

2019 ஆம் ஆண்டு மூன்று மொழிக் கொள்கை என மத்திய அரசு கல்வி திட்டத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்திய கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பானியல் இருந்தது இதற்கு ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று பஞ்சாப் சிங்கர் ஒருவர் பாடும் பாடலை தனது டூவீட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பொழுது யாரும் சரியாக கவனிக்கவில்லை அதற்கு அடுத்த நாளே இந்தி கண்டிப்பாக கட்டாயம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் “அழகிய தீர்வு” தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல……”திருத்தப்பட்டது வரைவு” என போஸ்ட் செய்திருந்தார். இத்துடன் நிறுத்தாமல் மறுநாளும் தனது டூவீட்டர் பக்கத்தில் அட்டோனாமஸ் என்ற வார்த்தைக்கு அமெரிக்க கேம்பிரிட்ஜ் புத்தகத்தின் அகராதியை தனது பக்கத்தில் ஷேர் செய்து மத்திய அரசு சுயநலம் மிக்க தன்னாட்சியுடன் செயல்படுகிறது என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.

Advertisement