லால் சலாம் படத்தில் இறந்த பாடகரின் குரல் – சர்ச்சைக்கு ஏ ஆர் ரஹ்மான் அளித்த விளக்கம்.

0
453
- Advertisement -

லால் சலாம் படத்தின் பாடலில் எழுந்த சர்ச்சைக்கு ஏ ஆர் ரகுமான் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் நிரோஷா, தங்கதுரை, தம்பி ராமையா, தன்யா பாலகிருஷ்ணன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

- Advertisement -

லால் சலாம் படம்:

கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் ஐஸ்வர்யா எடுத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக கடந்த வாரம் நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் ரஜினி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உட்பட குழுவினர் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். பின் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், காக்கா- கழுகு கதை, விஜய் குறித்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

படம் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருக்கிறார். ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தான் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிட்டு உரிமையை வாங்கி இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் இந்த படத்தில் இருந்து திமிறி எழுடா என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

லால் சலாம் பாடல் சர்ச்சை:

இதுவரை இந்த பாடல் 99 ஆயிரம் பேருக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னாடி பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோர் பாடியிருப்பது போல் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு ஏ ஆர் ரகுமான் அவர்களுடைய குடும்பத்தினரிடம் உரிய அனுமதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ ஆர் ரகுமான் விளக்கம்:

இதனை அடுத்து மறைந்த பாடகர்களின் குரலை இந்த பாடலில் பயன்படுத்தியதால் அவர்களின் குடும்பத்தினருக்கு பணம் கொடுக்கப்பட்டதா? என்ற சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்து இருக்கிறது. இதற்கு ஏ ஆர் ரகுமான் டீவ்ட்டரில், மறைந்த பாடகர்களின் குரல் வழிமுறைகளை பயன்படுத்திற்காக அவர்கள் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று தகுந்த ஊதியத்தை அனுப்பினோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் அது அச்சுறுத்தலும், தொல்லையும் அல்ல என்று கூறியிருக்கிறார்.

Advertisement