விடுதலை படத்தில் நடிக்கும் தன் அக்கா மகளை வாழ்த்தி ரஹ்மான் போட்ட பதவு – மாமா என்று குறிப்பிட்டு நடிகை போட்ட பதிவு.

0
563
ARRahman
- Advertisement -

விடுதலை படத்தில் நடிக்கும் தன் அக்கா மகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகிறது.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா படு பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும், இந்த திரைப்படம் நாளை மறுநாள் அதாவது மார்ச் 31ஆம் தேதி உலகெங்கும் வழியாக இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்னுடைய சொந்த அக்காவின் மகளான பவானி ஸ்ரீக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மானின் சொந்த அக்கா மகளான பவானி ஸ்ரீ விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான க/பெ.ரணசிங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். மேலும், பாவக்கதைகள் அந்தாலஜி வெப் தொடரில் தங்கம் என்ற வெப் தொடரில் இவர் சாந்தனுவின் ஜோடியாகவும் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவருக்கு வெற்றிமாறன் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படி ஒரு நிலையில் இவர் விடுதலை படத்தில் எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படம் ஒன்றை தன்னுடைய பிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த பதிவை பார்த்த ஏ ஆர் ரகுமான் தன்னுடைய அக்கா மகளுக்கு ‘மிகச் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்’ ‘என்று தன்னுடைய வாழ்க்கை தெரிவித்தார். தாய்மாமனின் இந்த வாழ்த்தை கண்ட பவானி ஸ்ரீ மிகவும் நன்றி மாமா என்று மகிழ்ச்சி பொங்க பதிவிட்டு இருக்கிறார் .

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பவானி ஸ்ரீ ‘கிராமத்தில் காவலராக பணியாற்றிவரும் கான்ஸ்டபிளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் பணியாற்றுவது எல்லா நடிகர்களுக்கு ஒரு கனவாக இருக்கும், ஆனால் எனக்கு நான் நடித்த இரண்டாவது படத்திலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனர், தனித்தன்மையான கதைகளை உருவாக்குவதில் சிறந்தவர். அதற்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். மரங்கள் நிறைந்த காடுகளில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்குள்ள சிறிய பூச்சிகளுக்கு கூட எந்த தீங்கும் நடக்க கூடாது என்று மிகவும் கவனமான பணியாற்றினார். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நடிகர் சூரி அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் கண்டிப்பாக அவருக்கு பாராட்டுக்கள் குவியும். அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்துஎன்று கூறி இருந்தார்.

Advertisement