ஏ.ஆர் ரஹ்மானுக்கு முதன் முதலில் வாய்ப்பளித்த இசையமைப்பாளர் காலமானார்

0
5384
a-rr
- Advertisement -

உலக அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசைப்புயல் என்ற பட்டத்துடன் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் ஒரே சமயத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றவர். இந்நிலையில் ஆஸ்கர் வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சினிமா உலகில் முதல் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் அவர்கள் இன்று காலமானார்.

-விளம்பரம்-
Here is how MK Arjunan supported a young Dileep to become AR Rahman

- Advertisement -

தற்போது இந்த தகவல் ஒட்டுமொத்த மலையாள திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மலையாள மொழி சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளர் எம் கே அர்ஜுனன். மலையாள சினிமாவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேல் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் 1931 ஆம் ஆண்டு கொச்சி துறைமுகம் அருகே சிரட்டப்பாலம் என்ற ஊரில் பிறந்தார்.

இதையும் பாருங்க : ஜாக்கிங் சென்ற நடிகையை கடித்து குதறிய தெரு நாய்கள். மருத்துவமனையில் சேர்த்த அக்கம் பக்கத்தினர்.

எம் கே அர்ஜுனன் அவர்கள் முதலில் மேடை நாடகங்களுக்கு இசை அமைத்தார். பின் சினிமா படங்களுக்கு இசை அமைத்தார். மலையாள மொழி சினிமாவில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த கறுத்த பௌர்ணமி என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பிரபல மலையாள பாடலாசிரியர் ஸ்ரீகுமரன் தம்பியுடன் இணைந்து இசையமைத்த பல பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

-விளம்பரம்-

இவரை மலையாள சினிமாவில் அர்ஜுனன் மாஸ்டர் என்று தான் அன்போடு அழைக்கப்பார்கள். இவர் மலையாளத்தில் மெல்லிசை மெட்டுக்களுக்காக பெரும்புகழ் பெற்றவர். மலையாளத்தில் இவர் இசை அமைத்த பாடல்கள் . இன்றும் மக்கள் மத்தியில் பெரிதும் வரேவேற்கப்படுகிறது. இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் படங்களில் பணியாற்றியுள்ளார். சுமார் 700க்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார்.

Music composer M.K. Arjunan no more - The Hindu

இவர் திரைப்படங்களுக்கு மட்டுமில்லாமல் மேடை நாடகங்களிலும் இசையமைத்துள்ளார். இந்நிலையில் 1981-ம் ஆண்டு எம்.கே.அர்ஜுனன் அவர்கள் ‘அடிமச்சங்களா’ என்ற மலையாளப் படத்தில் கீ போர்டு வாசிக்க ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார். இதுவே ஏ.ஆர்.ரகுமான் சினிமா உலகில் நுழைய காரணமாக இருந்தது. இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் மூலம் தான் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சினிமா உலகில் இவ்வளவு சாதனைகள் செய்தார்.

இதையும் பாருங்க : இந்தியாவை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று கொரானா மற்றொன்று ? அப்துல் காலிக் பதிவு.

சினிமா உலகில் ஏ.ஆர்.ரகுமான் நுழையக் காரணமாக இருந்ததே எம் கே அர்ஜுனன் தான். அதனால் எப்போதுமே எம் கே அர்ஜுனன் மீது ரகுமானுக்கு ஒரு தனி மரியாதை உண்டு. 2017 ஆம் ஆண்டு எம் கே அர்ஜுனன் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வு அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விலும் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டிருந்தார். இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன், ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.கே.அர்ஜுனன் அவர்கள் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பயானகம்’என்ற திரைப்படத்தில் இசை அமைத்திருந்தார். இந்த படத்திற்காக அர்ஜுனனுக்கு கேரள அரசின் மாநில விருது வழங்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜி.தேவராஜன் தான் இவரது குரு. தற்போது இசையமைப்பாளர் அர்ஜுனனுக்கு 86 வயதாகிறது. மேலும், இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் அவர்கள் இன்று கொச்சியில் உள்ள பல்லூருதியில் தன்னுடைய வீட்டில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருடைய மறைவிற்கு கேரள முதல்வர் பிரனாயி விஜயன் மற்றும் திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement