கார்கிலில் இந்தியில் பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல் – மோடி பகிர்ந்த வீடியோவிற்கு தமிழில் கமண்ட் செய்த ஏ ஆர் ரஹ்மான்.

0
389
- Advertisement -

நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்த நிலையில் அதற்கு தமிழில் ஏ ஆர் ரஹ்மான் ட்வீட் செய்து இருக்கும் பதிவு வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவின் முக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஏ ஆர் ரஹ்மான், தமிழ் மொழிக்காக செய்த Thug LIfe சம்பவங்கள் ஏராளம். 2012 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் என்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படத்திற்கு விருதுகள் வழங்கும்நிகழ்ச்சியாக அமைந்து இருந்தது. அந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதல் முடிவு வரை இந்தி மொழியிலேயே தொகுத்து வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

குறைந்தபட்சம் அனைவருக்கும் பொதுவான மொழியான ஆங்கில மொழியிலேயாவது தொகுத்து வழங்கியிருக்கலாம். ஆனால் இவர்களின் இந்த செயல் அங்கு இருப்பவர்கள் கண்டுக்காமல் இருந்து விட்டனர். ஆனால் அங்கிருந்து ஏ.ஆர்.ரகுமான் இதையெல்லாம் கண்டு கொண்டுதான் இருந்தார். சிறந்த நடிகருக்கான விருதை அறிவிப்பதற்காக ஏ.ஆர்.ரகுமான் மேடைக்கு அழைத்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்று தமிழில் பேசி விருதைய அறிவித்தார்.

- Advertisement -

இது அங்கிருந்த தமிழ் சினிமாவை சார்ந்த அனைவரையும் அதிர்ச்சி ஆழ்த்தியது இவர்கள் மட்டும் இல்லாமல் அந்த அரங்கத்தில் இருந்த அனைவரும் ஐந்து வினாடிகள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் இந்த வீடியோக்களை நீங்கள் அதிகமாக இணையத்தில் பார்த்திருப்பீர்கள்.2019 ஆம் ஆண்டு மூன்று மொழிக் கொள்கை என மத்திய அரசு கல்வி திட்டத்தில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்திய கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற பானியல் இருந்தது.

இதற்கு ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று பஞ்சாப் சிங்கர் ஒருவர் பாடும் பாடலை தனது டூவீட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அப்பொழுது யாரும் சரியாக கவனிக்கவில்லை அதற்கு அடுத்த நாளே இந்தி கண்டிப்பாக கட்டாயம் ஆக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் “அழகிய தீர்வு” தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல……”திருத்தப்பட்டது வரைவு” என போஸ்ட் செய்திருந்தார். இத்துடன் நிறுத்தாமல் மறுநாளும் தனது டூவீட்டர் பக்கத்தில் அட்டோனாமஸ் என்ற வார்த்தைக்கு அமெரிக்க கேம்பிரிட்ஜ் புத்தகத்தின் அகராதியை தனது பக்கத்தில் ஷேர் செய்து மத்திய அரசு சுயநலம் மிக்க தன்னாட்சியுடன் செயல்படுகிறது என்றவாறு குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-

இப்படி தமிழ் மொழிக்காக தொடர்ந்து ஏ ஆர் ரஹ்மான் குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் இந்திய ராணுவ வீரர்கள் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடிய வந்தே மாதரம் பாடலின் இந்தி வெர்ஷனை பாடி இருந்தார்கள்.

அந்த வீடியோவை பகிர்ந்த மோடி ‘கார்கிலில் ஒரு உற்சாகமான தீபாவளி’ என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் மோடியின் இந்த பதிவிற்கு, தான் இசையமைத்து பாடிய வந்தே மாதரம் பாடலில் இருந்து ” என்ற வரிகளை மட்டும் தமிழ் பதிவிட்டு இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான். அவரின் இந்த பதிவை கண்ட நெட்சன்கள் பலரும் நிஜமாவே நீ வேற லெவலு தான் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement