அரக்கோணம் இரட்டைக் கொலை – வன்னியர்களுக்கு ஆதரவாக திரௌபதி இயக்குனர் போட்ட பதிவு.

0
1585
mohan
- Advertisement -

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த அடுத்த நாள் (7 ஆம் தேதி) தலித் சமூக இளைஞர்களுக்கும் வன்னிய சமூக இளைஞர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அர்ஜுன், சூர்யா என்ற இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 

-விளம்பரம்-
ராமதாஸ் புதிய இயக்கம்: விஸ்வரூபம் எடுக்கிறதா அரக்கோணம் இரட்டைக் கொலை? | New  association formed by PMK Leader Ramadoss after double murder in Arakkonam.

அஜித், சுரேந்திரன், நந்தகுமார், கார்த்திக், சத்யா ஆகிய ஆறு பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த படுகொலை குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா வளவன், அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். இந்த வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் வி.சி.க வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். அத்துடன், பா.ம.க ஆதரிக்கும் அ.தி.மு.க வேட்பாளரை ஊருக்குள் விடவில்லை.

இதையும் பாருங்க : ‘அன்றே சொன்ன ரஜினி’ – ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக். என்ன காரணம் தெரியுமா ?

- Advertisement -

இவற்றையெல்லாம் மனதில் வைத்தே இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர் என்று கூறி இருந்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் திருமாவளவன் நடத்திமுடித்திருந்தார். அதே போல அ.தி.மு.க-வின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மகன்களும் அ.தி.மு.க, பா.ம.க சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர் என்று கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து சமுக வலைதள பக்கத்தில் கொலை வழக்கில் கைதாகியுள்ள நபர்களின் வன்னியர் இனத்தை விமர்சித்தும் வருகின்றனர். ஆனால், இருவர் செய்த தவறுக்கு வன்னியர்கள் எப்படி பொறுப்பாவார்கள் என்று வன்னியர்கள் பலரும் சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் StopHatredAgainstVanniyars என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டில் வந்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள திரௌபதி பட இயக்குனர் மோகன், அரசியலில் சில எழுச்சி வீரர்களுக்கு எப்போதெல்லாம் சரிவு வருகிறதோ அப்போதெல்லாம் தங்களை போராளியாக தலைவனாக காட்டி கொள்ள யாராவது ஒரு வன்னியரை குற்றவாளியாக காட்ட வேண்டும்.. மக்கள் போராட்டம், அற போராட்டம்னு உருட்டுவானுங்க.. இதை இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள்..

இதையும் பாருங்க : விவேக்கின் அஸ்தியில் கூட அவரது ஆசையை நிறைவேறியுள்ள குடும்பத்தினர் – அவரது ஆத்மா நிச்சயம் குளிர்ந்திருக்கும்.

மீடியாக்கள், அரசியல்வாதிகள், போரளிகள் என ஒன்றாக சேர்ந்து எவ்வளவு வெறுப்பை இந்த இனத்தின் மீது உமிழ்ந்து அழிக்க நினைத்தாலும் பீனிக்ஸ் பறவை போல மீண்டும் இந்த சமூகத்தை காக்க இங்கு பலர் பிறப்பார்கள்.. அழித்தே தீருவோம் என்று சொன்னவர்கள் அழிந்து போவீர்கள் என்று பதிவிட்டு StopHatredAgainstVanniyars என்ற ஹேஷ் டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement