கருப்பா இருக்கானு வேணான்னு சொல்லிட்டாரு ,அறந்தாங்கி நிஷாவின் பெற்றோர் உருக்கமான பேட்டி.

0
46042
- Advertisement -

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார். காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. இந்நிலையில் மகளிர் தினத்தன்று அறந்தாங்கி நிஷாவின் பெற்றோர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அறந்தாங்கி நிஷா குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். அதில் அவர்கள் கூறியது, என்னுடைய மகள் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த தருணத்தில் அனைவருக்கும் நான் நன்றி சொல்கிறேன்.

- Advertisement -

என் மகள் எம்பிஏ படித்து இருக்கிறார். படித்து முடித்து என் மகளுக்கு திருமணம் செய்ய நாங்கள் முடிவு எடுத்தோம். என் மகளை பெண் பார்க்க வந்தவர்கள் எல்லாம் எவ்வளவு படித்திருந்தாலும் கலர் கருப்பாக இருக்கிறார் என்று கூறி வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது நான் எவ்வளவோ அழுது புலம்பி இருக்கிறேன். ஆனால், ஒரு மனிதனுக்கு நிறம் முக்கியம் இல்லை மனமும், குணமும் தான் முக்கியம் என்பதை என் மகள் நிரூபித்து விட்டார். என் மகள் மீடியாவிற்கு நுழையும் போது பல பேர் என்னிடம் இதெல்லாம் தேவையில்லை பெண்பிள்ளை வேணாம் என்று சொன்னார்கள். ஆனால், என் மகள் மிகவும் தைரியமானவள். நான் அவளை பெண் பிள்ளையாக வளர்க்கவில்லை.

ஆண் மாதிரி தான் தைரியமாக வளர்த்தேன். அவளே வெளியில் செல்லும் போது அம்மா நான் பெண்ணில்லை வீரப் பெண் என்று சொல்லுவாள். அந்த அளவிற்கு தைரியமும் துணிச்சலும் உடையவள் நிஷா. ஒருமுறை கஜா புயல் வந்தபோது பல பேர் கஷ்டப்பட்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் என் மகள் காலையில் சென்று நள்ளிரவில் வீடு திரும்பும்போது பயத்துடன் நாங்கள் இருப்போம். ஆனால், அவள் சோர்வில்லாமல் சிரித்த புன்னகையுடன் வீடு திரும்புவார். எப்போதுமே என் மகளுக்கு பிறருக்கு உதவும் மனப்பான்மை அதிகம்.

-விளம்பரம்-

அதனாலேயே எங்களை பற்றியும் அவளுடைய குழந்தையை பற்றியும் கூட கவலைப்படாமல் கஷ்டப்படுபவர்களுக்கு அவளால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்தளவிற்கு என்னுடைய மருமகனும், அவருடைய மாமியார், மாமனாரும் உறுதுணையாக இருக்கிறார்கள். அவர்களின் உறுதுணையும் நம்பிக்கையும் தான் என் மகளின் வளர்ச்சிக்கு ஒரு பக்கபலம் என்று சொல்லலாம். இந்த தருணத்தில் என் மகளை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ஒரு மனிதனுக்கு குணம் தான் முக்கியம் நிறம் முக்கியம் இல்லை என்பதை என் மகள் சாதித்து விட்டாள் என்று ஆனந்த கண்ணீருடன் கூறினார்.

Advertisement