‘இந்த சகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி இந்த வெயில கூட பொருட்படுத்தாமல்’ அறந்தாங்கி நிஷா பகிர்ந்த உருக்கமான வீடியோ

0
264
- Advertisement -

சின்னத்திரையில் பெண் காமெடியன்கள் இருப்பது அரிதான ஒரு விஷயம். அப்படி சின்னத்திரையில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. காமெடி என்றால் எங்கள் ஏரியா என்று ஆண்கள் சொல்லிக்கொள்ளும் நிலையில் பெண்களாலும் காமெடி செய்ய முடியும் என்று நிரூபித்து காட்டியவர் அறந்தாங்கி நிஷா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பல்வேறு ஆண் போட்டியாளர்கள் மத்தியில் கலந்துகொண்டு பிரபலமானார்.

-விளம்பரம்-
nisha

காமெடி செய்வது பெண்களாலும் முடியும் என்று மக்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

அறந்தாங்கி நிஷா கடந்த சில வருடங்களுக்கு முன் ரியாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நிறைவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நிஷா. அப்போது தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது.மேலும் , தனது அம்மாவே தனக்கு மகளாக பிறந்துவிட்டார் என்று உருக்கமுடன் தெரிவித்திருந்தார் நிஷா.

காமெடியை தாண்டி நிஷா அடிக்கடி பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார், அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையை திருப்பி போட்ட நிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் கார்த்தி- சூர்யா இருவரும் இணைந்து மிக்ஜாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுத்திருந்தனர்.

-விளம்பரம்-

அதே போல சமீபத்தில் சிவகார்த்திகேயன் கூட 10 லட்சம் கொடுத்து இருந்தார். வெள்ளித்திரை பிரபலங்கள் போல சின்னத்திரை பிரபலமான பாலா பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வருகிறார். அந்த வகையில் நிஷாவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் சில அத்யாவசிய பொருட்களை கொடுத்து இருந்தார். அதுவும் தனது மகளுக்கு டைபாய்டு ஏற்பட்டு ICU அனுமதிக்கப்பட்ட நிலையிலும் மக்களுக்கு உதவி செய்தார் நிஷா.

இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘இன்றைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக மதுரைக்கு போயிட்டு இருக்கும்போது, அருமை சகோதரர் இவர் பெயர் கண்ணன் எல்லா ஆண்களும் தன்னுடைய குடும்பத்திற்காக என்ன வெயில் வந்தாலும் என்ன மழை வந்தாலும் எல்லாத்தையும் தாண்டி தன்னை நம்பியிருக்கக்கூடிய குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் உழைக்கிறத பார்க்கும்போது அவங்க மேல எப்பவுமே மரியாதை கூடும். இந்த சகோதரர் ஒரு மாற்றுத்திறனாளி இந்த வெயில கூட பொருட்படுத்தாமல் குடும்பத்திற்காக உழைக்கிறத பார்க்கும்போது நான் அப்பப்ப வேலை கஷ்டமா இருக்குன்னு சொல்லுவேன் இனி சத்தியமா ஒரு நாளும் சொல்ல மாட்டேன்…… அப்புறம் உனக்கு சகோதரியா ஒன்னே ஒன்னு கேக்குறேன், ஒருவேளை நம்ம சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டோம் அப்படின்னா தயவு செஞ்சு அப்பாக்களுக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார் நிஷா.

Advertisement