”வாத்து உதடு’ தனது உதடுகள் குறித்த விமர்சனம் – பாக்கியலட்சுமி ரேஷ்மா கொடுத்த பதிலடியும் விளக்கமும்.

0
332
- Advertisement -

“புஷ்பா புருஷன்” என்ற டயலாக் மூலம் மக்களிடையே பிரபலம் ஆனவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் ஒரு விமான பணிப் பெண்ணாக பணி புரிந்து இருந்தார் . இதற்கு பிறகு தான் நடிகை ரேஷ்மா அவர்கள் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானர்.அதற்குப் பின்னர் அவர் சன் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் ஒன்றான “வம்சம்” என்ற தொடரின் மூலம் சின்ன திரையில் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் இதற்கு முன்பு தெலுங்கு சீரியலில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்பு வந்தது. அதோடு இவருடைய தந்தை பிரசாத் பசுபுலேட்டி அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். மேலும், இவர் தயாரித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

- Advertisement -

ரேஷ்மா குறித்த தகவல்:

முதல் படத்திலேயே இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் சில படங்களில் நடித்து இருக்கிறார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் சீரியல்கள் மற்றும் படங்களில் ரேஷ்மா பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா நடிக்கிறார்.

ரேஷ்மா நடிக்கும் சீரியல்கள்:

இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் ரேஷ்மாக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார்.

-விளம்பரம்-

ரேஷ்மா இந்த தொடரில் நடிக்க துவங்கியதில் இருந்தே அவரது உதடு பற்றி பல விதமான கேலிகள் எழுந்தது. ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக இருக்கும் Duck Lip போல தனது லிப்பை ரேஷ்மா அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்ற விமர்சனமும் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரேஷ்மா ‘இது என் உதடு. என் இஷ்டம். இது இப்படி இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது. இதற்காக உங்களிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை’ என்று காட்டமாக கூறி இருக்கிறார்.

ஏற்கனவே இன்ஸ்டாகிராம் லைவின் போது ரசிகர் ஒருவர் ‘உங்கள் உதடுகளை அறுவை சிகிச்சை செய்துகொண்டீர்களா’ என்று கமண்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ரேஷ்மா ‘ நான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை நான் என்னுடைய உதட்டில் லிப் பில்லிங் செய்து இருக்கிறேன் இது எப்போதெல்லாம் மிகவும் சர்வ சாதாரணமான ஒன்றுதான் அதை ஏன் அனைவரும் இப்படி வித்தியாசமாக பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்று கூறியிருந்தார் ரேஷ்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement