முதல் குழந்தைக்கு தாயக போகும் அறந்தாங்கி நிஷா.. வெளியான சீமந்த புகைப்படங்கள்..

0
43683
aranthangi-nisha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது மக்களின் மனதில் அதிக இடம் பிடித்தவர் அறந்தாங்கி நிஷா. மேலும், பெண்களும் நகைச்சுவை செய்ய முடியும் என்ற கருத்தை தகர்த்தெறிந்தவர். “காமெடி எங்க ஏரியா “என்று ஆண்கள் பெருமிதமாக கட்டிய கோட்டையை உடைத் தெரிந்தவர். தற்போது காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறி வந்தார்கள் மத்தியில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எண்ணம் தவறானது என்று நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா.தன்னுடைய நகைச்சுவை பேச்சாற்றலால் பல மேடைகளில் கலக்கிய அறந்தாங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.அது மட்டும் இல்லைங்க நம்ம அறந்தாங்கி நிஷா கூடிய சீக்கிரத்துல ஒரு குழந்தையை பெற்று எடுக்க போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது நிஷா கூறியது,

-விளம்பரம்-
ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

நானும் என் குழந்தையும் சேர்ந்து தான் காமெடி பண்ணிட்டு இருக்கோம். என் குழந்தை வெளி உலகத்திற்கு வருவதற்கு முன்னாடியே மற்றவர்களை சிரிக்க வைத்து வருது என்று கூட சொல்லுவேன். நேற்றுதான் அறந்தாங்கி நிஷாவுக்கும் அவருடைய கணவர் ரியாஸ் சலிக்கும் கல்யாண நாள். இதனால் சமூக வலைத்தளங்களில் நிஷாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமில்லாமல் திட்டிக் கொண்டும் வருகிறார்கள். என்னவென்று பார்த்தால் 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிஷா ஓய்வு எடுக்காமல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார் என்றும், அதோட துபாய் சென்று இருந்தார் என்றும் தெரியவந்தது. அதோடு விஜய் டிவியில் நடக்கும் சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இப்படி கர்பிணிபெண் ஓய்வு எடுக்காமல் இருப்பது நல்லதன்று என ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இதையும் பாருங்க : ஹன்சிகாவிற்கு வில்லனாகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்.. புகைப்படம் உள்ளே..

- Advertisement -

அதிலும் ஒருசில பேர் கடுமையாக விமர்சிக்கின்றனர். இதுகுறித்து நிஷாவிடம் கேட்டபோது நிஷா கூறியது,நான் துபாய் போயிட்டு இரண்டு நாட்கள் முன்னாடிதான் வந்தேன். என்னை ஏர்போர்ட்ல பார்த்து எல்லாருமே , ஏன் இந்த மாதிரி சமயத்துல ரிஸ்க் எடுக்கிறீங்க என்று கேட்டார்கள். அவங்க திட்டனது எனக்கு கஷ்டமாக இல்லை.ஏன்னா இவங்க எல்லோரும் என் மேல இவ்வளவு அக்கறையா இருக்கிறதுக்கு அவங்களுக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன். அதோடு இந்த சமயத்தில் எனக்கு நிறைய அட்வைஸ் பண்ணாங்க. என்ன பொருத்த வரை நான் ரொம்ப தைரியமாகவும், நம்பிக்கையோடு தான் இருக்கிறேன். அதே மாதிரி தான் என் வயித்துல இருக்குற குழந்தையும் இருக்கணும். நான் அதை தான் இப்ப இருந்தே என் குழந்தைக்கு தர தொடங்கிவிட்டேன். மேலும், இந்த இடத்திற்கு வர என் வாழ்க்கையில நான் ரொம்ப கஷ்டப்பட்டு ,அடிபட்டு தான் வந்தேன். இப்ப நான் கொஞ்சம் சோர்வா இருக்குனு ஓய்வெடுத்து இருந்த இந்த அளவுக்கு நான் ஓடி உழைத்து எல்லாம் வீணாகப் போய்விடும். அதனால என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உழைப்பேன்.

ரியாஸ் அலி, அறந்தாங்கி நிஷா

இப்ப நானும், என் குழந்தையும் சேர்ந்து தான் காமெடி பண்றோம்.ஒரே பேமண்டுல ரெண்டு பேர் வேலை பார்க்கிறோம். அதோட என் கணவர் கிட்ட அனுமதி வாங்கி தான் நான் நிகழ்ச்சியில் பங்கு ஏற்கிறேன். அது மட்டும் இல்லைங்க என் கணவர் கிட்ட குழந்தை பிறந்த உடனே என்னால ரொம்ப நாள் ஓய்வு எடுக்க முடியாது நான் என்னுடைய வேலைக்கு சென்று விடுவேன் என்று கூறினேன். அவரும் உன் உடல் நிலை உனக்கு ஒத்துழைச்சால் போ என்று சொன்னார். என் கணவர் அரசு வேலையில் பணியாற்றினாலும் பொருளாதார ரீதியாக நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தோம்.இப்ப தான் எல்லா பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி மேலே வந்திருக்கும். அந்த இடத்தை நான் அவ்ளோ சீக்கிரமா விட மாட்டேன்.

-விளம்பரம்-

நான் காமெடி பண்ண நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது எனக்கு ரொம்ப என்கரேஜ் ஆக இருக்கும். என்னால முடியும் என நினைச்சுட்டு நான் ஓடுவேன். ஒரு முறை என் கணவர் கிட்ட நான் டெலிவரிக்கு முன்னாடி நாள் வரை நான் நடித்து கொண்டு தான் இருப்பேன் என்று கூறினேன்.அதற்கு அவர் நீ விஜய் டிவிலேயே குழந்தையும் பெற்றெடு என்று கலாய்ப்பார். எங்க கல்யாண நாளுக்கு வழக்கம் போல புடவை வாங்கித் தந்தாரு. அவருக்கு அந்த புடவைக்கு மேட்சிங்கா டிரஸ் நான் எடுத்து தந்தேன். இது எல்லாத்தையும் தாண்டி அவர் என் மேல வைத்திருக்கும் அன்பு, பாசம், புரிதல் தான் இந்த அளவிற்கு நான் முன்னேறி இருப்பதற்கு காரணம்.

ஏன்னா தினமும் எங்கள் உறவினர்கள் அவருக்கு போன் செய்து நிஷாவை வீட்டில் இருக்க சொல்லு.வேலைக்கு ஒன்னும் வேணாம்னு சொல்லுவாங்க. ஆனா, அவரு நிஷாவுக்கு எது சரின்னு படுதோ அதை செய்யட்டும். அவள் குழந்தையாக பத்திரமா பாத்துக்குவா, அத பத்தி கவலை படாதிங்க என்று சொல்லுவார். என் வாழ்க்கையில் மிகப் பெரிய கிப்ட் என்று சொன்னால் அது என் கணவர்தான். அதோட கடவுள் புண்ணியத்துல எனக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும். என்ன மாதிரி தைரியமாகவும், தன்னம்பிக்கையோடும் வளர்ப்பேன் என்று கூறினார்.

Advertisement