90ஸின் சாக்லேட் பாய் அரவிந்த்சாமியின் ஸ்வீட் மகளா இது ? எப்படி இருக்கார் பாருங்க. என்ன படித்துள்ளார் தெரியுமா ?

0
422
aravind
- Advertisement -

வெளிநாட்டில் படிக்கும் நடிகர் அரவிந்த்சாமி மகளின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அரவிந்த்சாமி. இவர் நடிகர் மட்டுமில்லாமல் தொழிலதிபரும் ஆவார். இவர் திருச்சிராப்பள்ளியை சேர்ந்தவர். இவர் தொலைக்காட்சி நடிகர் டெல்லி குமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அரவிந்த்சாமி தன் மாமாவின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். பின் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த தளபதி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இருந்தாலும் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மணிரத்தினத்தின் ரோஜா படம் தான்.

-விளம்பரம்-
aravind-swamy

இந்த படம் நாடெங்கிலும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் பம்பாய், இந்திரா, மின்சார கனவு, அலைபாயுதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். பின் இவர் 2000 ஆண்டு முதல் நடிப்பை விட்டு தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் நடுவில் அரவிந்த்சாமி சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். அதற்குப் பிறகு கடல் என்ற படத்தின் மூலம் இவர் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதையும் பாருங்க : தனுஷ் பட வசனத்தால் கடுப்பான எஸ்.ஐ – தற்கொலைக்கு முயன்ற இளைஞர். என்ன காரணம் பாருங்க.

- Advertisement -

அரவிந்த்சாமி நடித்த படங்கள்:

அதனை தொடர்ந்து இவர் செக்க சிவந்த வானம், தனி ஒருவன்,போகன் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் கதைகளை தேர்ந்தெடுத்து கவனமாக நடித்து வருகிறார். சமீப காலமாக அரவிந்த் சாமி நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாக நடித்து வந்தாலும் தற்போது இவர் வில்லன் கதாபாத்திரத்திலும் மிரட்டி வருகிறார். சிலகாலம் அரவிந்த்சாமி சினிமாவில் காணாமல் போய் இருந்தாலும் இவருக்கு என்ற ரசிகர்களின் கூட்டம் பட்டாளம் குறைந்தபாடில்லை.

அரவிந்த்சாமி நடிக்கும் படங்கள்:

அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர். கடைசியாக இவர் பாஸ்கர் ஒரு ராஸ்கல், தலைவி போன்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வ வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது அரவிந்த் சாமி அவர்கள் புலனாய்வு, சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, ரெண்டகம், நரகாசுரன் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படங்கள் எல்லாம் இந்த ஆண்டு இறுதியிலும் அடுத்த ஆண்டு தொடக்கத்திலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அரவிந்த்சாமி குடும்ப புகைப்படம்:

இதனிடையே அரவிந்த் சுவாமி அவர்கள் 1994-ம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளார்கள். இந்நிலையில் அரவிந்த் சுவாமி மகள் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் பல நடிகர்கள் தங்களுடைய குழந்தைகளை மீடியாவிற்கு கொண்டுவராமல் ரகசியமாக வைத்திருப்பார்கள். அந்த வரிசையில் அரவிந்த்சாமியும் ஒருவர். அரவிந்த் சுவாமி குடும்பம் பற்றிய விவரம் சோசியல் மீடியாவில் வெளிவராத நிலையில் தற்போது குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

அரவிந்த்சாமி மகள் பற்றிய தகவல்:

அரவிந்த்சாமி அவர்கள் தன்னுடைய மகனை ஒரு வக்கீலாகவும், மகளை ஒரு சமையல் சக்கரவர்த்தியாக உருவாக்கியுள்ளார். இவர் உடைய மகள் வெளிநாட்டில் சமையல் சம்மந்தப்பட்ட படிப்பை முடித்தவர். மேலும், அரவிந்த் சுவாமியின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு அழகான மகளா! பார்ப்பதற்கு ஹிந்தி நடிகை போலவே இருக்கிறாரே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் பலரும் அரவிந்த் சாமிக்கு வாழ்த்து தெரிவித்தும், இவருடைய புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கியும் வருகிறார்கள்.

Advertisement