அரவிந்த் சாமி நடித்துள்ள ரெண்டகம் எப்படி இருக்கிறது – முழு விமர்சனம் இதோ.

0
126
- Advertisement -

இயக்குனர் பெலினி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ரெண்டகம். இந்த படத்தில் அரவிந்த்சாமி, குஞ்சக்கோ போபன், ஈஷா ரெப்பா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.எச்.காசிப் ஆவார். மலையாளத்தில் இந்த படம் ஓட்டு என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இன்று தமிழில் ரெண்டகம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

பெரிய தாதாவாக இருக்கும் ஒரு டான் தன்னுடைய பழைய நினைவுகளை எல்லாம் மறந்தால் அவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பது தான் படத்தின் ஓன்லைன். படத்தில் மும்பையில் பெரிய தாதாவாக இருக்கிறார் டேவிட். ஆனால், இவர் தான் ஒரு டான் என்ற பழைய நினைவுகள் எல்லாம் மறந்து தியேட்டரில் பாப்கான் விற்று வருகிறார். இவர் தாதாவாக இருந்தபோது கைமாற்ற வைத்திருந்த தங்கத்தை தவறவிட்டதால் அதனை தற்போது மீட்டெடுக்க ஒரு குழு திட்டமிட்டு வருகிறது.

- Advertisement -

இதனால் இவருக்கு ஒரு நண்பரை தயார் செய்து அவருடன் நெருங்கி பழகி பழைய நினைவுகள் எல்லாம் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். இதற்காக டேவிட் இடம் நண்பனாக பழக குஞ்சக்கோ போபனை அனுப்பி வைக்கின்றனர். அவரும் டேவிட் உடன் நெருங்கி பழகி அவரிடம் இருந்து பழைய நினைவுகளை கொண்டு வர முயற்சி செய்கிறார். பின் இருவரும் நன்றாக நெருங்கி பழகி நண்பர்களாகின்றனர். ஆனால், பழைய நினைவுகள் வந்து விட்டால் டேவிட்டை கொலை செய்து விடுவார்களே என்ற பயத்தில் குஞ்சக்கோ போபன் இருக்கிறார்.

இறுதியில் டேவிட் இடம் இருந்து பழைய விஷயங்களை பெற்றார்களா? இல்லையா? எப்படி அவருக்கு நினைவுகள் வர வைத்தார்கள்? இறுதியில் என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை. டேவிட் என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார். வழக்கம்போல் அரவிந்த்சாமி தன்னுடைய நடிப்பில் மிரட்டி இருக்கிறார். தாதாவாக இருந்து நினைவுகள் எல்லாம் மறந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை அரவிந்த் சாமி வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

இவருடைய நண்பராக வரும் குஞ்சக்கோ போபன் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆனால், முதல் பாதியில் நன்றாக நடித்துவிட்டு இரண்டாம் பாதியில் கொஞ்சம் பில்டப்பாக நடித்திருக்கிறார் என்று சொல்லலாம். வித்தியாசமான கதையை விறுவிறுப்பாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். கேங்ஸ்டர் பாணியில் இந்த படத்தை கொண்டு சென்று விறுவிறுப்பான தில்லராக மாற்றியிருக்கிறார் இயக்குனர். ஆனால், இரண்டாம் பாதியில் கொடுக்கப்படும் பில்டப் காட்சிகள் தான் பார்வையாளர்களை சலிப்பு தட்ட வைத்து இருக்கிறது.

படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி செய்யும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. சாதாரண கேங்ஸ்டர் படமாக இல்லாமல் டீவ்ஸ்ட்களை வைத்து திரில்லர் படமாக இயக்குனர் முயற்சி செய்திருப்பது
பாராட்டுக்குரிய விஷயமாக இருக்குது. ஆனால், அந்த ட்விஸ்ட் எல்லாம் ரசிகர்களே எளிதில் கணிக்க கூடியதாக இருப்பது தான் மைனஸ் ஆக இருக்கிறது. இயக்குனர் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் வேற லெவல்ல படம் இருந்திருக்கும்.

பிளஸ்:

நடிகர்களின் நடிப்பு சிறப்பு.

ஒளிப்பதிவும், பின்னணி செய்யும் படத்திற்கு பக்க பலம்.

வித்தியாசமான கதை.

மைனஸ்:

இரண்டாம் பாதியில் வரும் பில்டப் காட்சிகள் சலிப்பை தட்டுகிறது.

திரைக்கதையில் இன்னும் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.

படத்தில் காண்பிக்கப்படும் ட்விஸ்ட்கள் எல்லாம் யூகிக்க கூடிய அளவிலேயே இருக்கிறது.

மொத்தத்தில் ரெண்டகம் – சுமாரான படம்.

Advertisement