விஜய் 63 பற்றி வெளியான வதந்தி.! முற்றுப்புள்ளி வைத்த தயரிப்பாளர்.! அப்போ ரசிகர்களுக்கு ?

0
670
Vijay-63

சர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் படத்தின் மூலம் மூன்றாவதாக முறையாக மீண்டும் இணைகிறது அட்லீ மற்றும் விஜய்யின் வெற்றிக் கூட்டணி. 

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, கதிர், விவேக் ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நடிகர்கள் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தை பற்றிய பல்வேறு வதந்திகள் அடிக்கடி வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படுவதாக இருந்த இந்த படம் அதற்கு முன்பாகவாக அதாவது வரும் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

ஆனால், இந்த தகவலை மறுத்துள்ளார் கல்பாத்தி அகோரத்தின் மகன் அர்ச்சனா, விஜய் 63 படம் திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை அதனால் ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement