அநியாயமாக உயிரிழந்த அஜித்தின் தீவிர ரசிகர் – ட்ரெண்டிங்கில் வந்த #RIPThalaPRAKASH ஹேஷ் டேக் – யார் இவர் ?

0
1511
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் தல அஜித்தும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினாலும், விடாமுயற்சியினாலும் சினிமா உலகில் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளார். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்களை கொண்டவர். இவரை திரையுலகம் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் அல்டிமேட் ஸ்டார், தல என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

-விளம்பரம்-

இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்படி ஒரு நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் பிரகாஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஜித்தின் தீவிர ரசிகரான பிரகாஷ், அஜித்தின் பிறந்த தேதி, அஜித்தின் பொழுது போக்கு போன்ற பலவற்றையும் தனது உடலில் பச்சை குத்தி கொண்டு அஜித் மீது தனக்கு இருக்கும் வெறியை வெளி காட்டியவர்.

இதையும் பாருங்க : ex wife -அ அழைத்த சாண்டி மனைவிக்கு தான் பெரிய மனசு – காஜல் பகிர்ந்த உருக்கமான புகைப்படம்.

- Advertisement -

தாய் தந்தைக்கு பின்னர் அஜித் தான் என்பதே இவரது கொள்கை. மேலும், இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூட கலந்துகொண்டார். அப்போது இவர் குத்தியிருந்த அஜித் பற்றிய டாட்டூவையெல்லாம் பார்த்து பலரும் வியந்து போனார்கள். இப்படி ஒரு நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பத்தால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இவர் இறந்த செய்தியை சமூக வலைதளத்தில் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதே போல இவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வீடியோவையும் பகிர்ந்து உள்ளனர். இப்படி ஒரு ரசிகர் இறந்த நிலையில் ட்விட்டரில் RIP Thala Prakash என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

அதே போல பிரகாஷ் பகுதியில் இருக்கும் அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் பிரகாஷ் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளை செய்யுமாறும் வேண்டுகோள்விடுத்துவருகின்றனர். தற்கொலை என்றும் எதற்கும் தீர்வாகாது தற்கொலை எண்ணம் வந்தால், உங்களுக்கு நெருக்கமான நபர்களிடம் மனம்விட்டு உங்கள் குறைகளை சொல்லுங்கள். இல்லையென்றால் மனோதத்துவ நிபுணர்களின் ஆலோசனையை நாடுங்கள்.

Advertisement