13 வருட காதல் , திருமணத்திற்கு ஓகே சொன்ன அர்ஜுன் மகள் அஞ்சனா – மாப்பிளை யார் தெரியுமா?

0
184
- Advertisement -

நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகஸ்தர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். மேலும், இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இதனிடையே நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். இதில் அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் இவருக்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்து இருந்தார்கள்.

- Advertisement -

ஐஸ்வர்யா-உமாபதி திருமணம்:

பின் இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் கட்டி இருந்த ஆஞ்சநேயர் கோயிலில் உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. பின் கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஐஸ்வர்யா- உமாபதி திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தார்கள். இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் இருந்தார்கள்.

அர்ஜுனின் இரண்டாவது மகள்:

மேலும், அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. இவர் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் கூட இவர் கிளாமரான ஆடை அணிந்து ஆற்றில் குளிப்பது போல் போட்டோ எடுத்து வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே, நீங்கள் ஹீரோயினியாக நடியுங்கள் என்று கமெண்ட் போட்டு இருந்தார்கள். ஆனால், அஞ்சனாவிற்கு கொஞ்சம் கூட சினிமாவில் ஆர்வமே இல்லை. இவர் ஒரு தொழிலதிபராக ஆக வேண்டும் என்று தான் ரொம்ப ஆசைப்பட்டார்.

-விளம்பரம்-

அஞ்சனா குறித்த தகவல்:

பின் கடந்து 2023 ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இங்கு செய்யப்படும் ஹேண்ட் பேக் அனைத்தும் பழங்களின் தோல், காய்கறிகள் தோல், நார் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. அதோட தன்னுடைய நிறுவனத்தின் மாடலாகவும் இவரே இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் அஞ்சனாவிற்கு திருமணம் நடக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சனா திருமணம்:

கிட்டத்தட்ட 13 வருடங்களாக தன்னை காதலித்து வந்த காதலர் உடைய ப்ரொபோசலை அஞ்சனா ஏற்றுக் கொண்டிருக்கிறார். இவர் வெளிநாட்டு மாப்பிளை. இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், மாப்பிள்ளை குறித்த விவரம் தான் பெரிதாக தெரியவில்லை. கூடிய விரைவில் அஞ்சனாவின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement