சில விஷங்கள் அவ்ளோ சீக்கிரம் மறக்க முடியாது – ரசிகர்களை கலங்க வைத்த அர்ஜுனின் பதிவு. யார் தெரியுதா ?

0
333
arjun
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அர்ஜுன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே ஆக்சன் பாணியில் இருக்கும். அதனால் இவரை அனைவரும் ஆக்சன் கிங் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். அதுமட்டுமில்லாமல் இவர் ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து சில படங்களிலும் அர்ஜுன் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். அர்ஜுன் எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் தற்போது அர்ஜுன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

- Advertisement -

அதில் அர்ஜுன் தன்னுடைய சிறுவயதில் ஒரு சிறுவனை தூக்கி வைத்திருக்கிறார். அது வேற யாரும் இல்லைங்க, மறைந்த கன்னட சினிமாவின் டாப் நடிகரான புனித் ராஜ்குமார் தான் அந்த சிறு வயது பையன். மேலும், இந்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் Some things just don’t sink in.. My dear Appu is eternal என்று உருக்கமாக கூறி இருக்கிறார். தற்போது இந்த டீவ்ட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Darshan At Ayra Yash Birthday Celebration | Rocking Star Yash Daughter  Birthday | Darshan Yash - YouTube

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் திரையுலகில் புனித் ராஜ்குமார். இவரை ரசிகர்கள் எல்லோரும் பவர்ஸ்டார் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. கடந்த மாதம் புனித் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின் ஐசிவில் இருக்கும் புனித் ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காலமானார். இவருடைய இழப்பு ரசிகர்களும், பிரபலங்களும் பேரிடியாக இருந்தது.

-விளம்பரம்-
Advertisement