சர்வைவர் முடிந்த கொஞ்ச நாளிலேயே ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு ஏற்பட்டுள்ள சோகம்.

0
350
arjun
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவருடைய படங்கள் எல்லாமே ஆக்ஷன், அதிரடி, தேசப்பற்று பாணியில் இருக்கும். இதனாலே அவருடைய படங்களை பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். அதேபோல சுமார் 5க்கும் மேற்பட்ட பாடல்களையும் அர்ஜுன் பாடியுள்ளார். அர்ஜுன் அவர்கள் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு தற்போது வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சாகச நிகழ்ச்சியான சர்வைவர் நிகழ்ச்சியையும் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். பின் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த மரைக்காயர் படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது 2 தமிழ் படங்களிலும், ஒரு மலையாள படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முடிந்த ‘சர்வைவர்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இருந்தார். இப்படி பிஸியான நிலையில் அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இது குறித்து அர்ஜுன் கூறி இருப்பது, எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். அது மட்டுமில்லாமல் என்னை சமீபத்தில் சந்தித்தவர்கள் கூட கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிவதை புறக்கணிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

Arjun tested positive for corona

இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி இவர் பதிவிட்ட பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதேபோல் சமீபத்தில் கமல்ஹாசனுக்கும் கொரோனா உறுதி ஆகி இருந்தது. பின் அவருக்கு தீவிர சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. பிறகு கமல் குணமாகி வந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement