படு கோரமான கார் விபத்தில் சிக்கிய அர்னால்டு – சம்பவ இடத்தில் இருந்து வெளியான அவரின் புகைப்படம்.

0
151
Arnold
- Advertisement -

அடுத்தடுத்து மோதிய கார்கள் விபத்துக்குள் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்டு புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அர்னால்ட் சுவார்செனேகர். ஹாலிவுட் நடிகர்களில் நாம் மறக்க முடியாத ஒரு நடிகர் என்றால் அர்னால்ட் தான். இவர் ஆஸ்திரியாவில் உள்ள தாள் என்கிற சிறிய ஊரில் பிறந்தவர். இவர் ஆரம்பத்தில் ராணுவத்தில் பணியாற்றி இருந்தார். ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஜூனியர் திரு. ஐரோப்பா என்கிற ஆணழகன் பட்டத்தை வென்றார். அதுமட்டுமில்லாமல் அர்னால்ட் உலக ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடத்தையும் பெற்றிருந்தார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் திரு ஒலிம்பியா ஆணழகன் பட்டத்தை 7 முறை வென்றிருக்கிறார். அதற்குப் பிறகு தான் இவர் விளம்பரம், மாடலிங்கில் நடித்து வந்தார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். அதோடு இவர் தனது உடற்பயிற்சியினை தன்னுடைய 15 வயதில் இருந்தே செய்து வருகிறார். இவர் முன்னாள் தொழில்துறை உடற்கட்டு கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது வலிமையான உடல் அமைப்பை வைத்து சினிமாவினுள் நுழைந்தார். இவர் ஒரு காலகட்டத்தில் பாடி பில்டிங் துறையில் இருந்தார்.

- Advertisement -

அர்னால்ட் சுவார்செனேகர் நடித்த படங்கள்:

அதன் பின்னர் சினிமாவில் நடிக்கதுங்கினார். அதோடு இவரின் உடல் அழகுக்கு மட்டுமே பல ரசிகர்கள் உள்ளார்கள். பெரும்பாலும் இவர் வலிமையான ஆக்ஷன் கதைகளிலேயே நடித்து வந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த டெர்மினேட்டர், கமாண்டோ, கேனன் தி பார்பேரியன், பிரடியேட்டர், டோட்டல் ரீகால், ட்ரூ லைவ்ஸ் போன்ற படங்கள் எல்லாம் உலக அளவில் புகழ் பெற்றது. மேலும், இவரை அனைவரும் “ஆஸ்ட்ரியன் ஓக்” என்று தான் அழைப்பார்கள். இவருக்கு தற்போது 74 வயதாகிறது.

அர்னால்ட் சுவார்செனேகரின் கவர்னர் பதிவு:

மேலும், 2003 ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 38-வது ஆளுநர் ஆனார். இவர் கவர்னராக 2011ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் அர்னால்டின் கார் விபத்தில் சிக்கி உள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் நடிகரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பிரெண்ட்வுட்டில் வசித்து வருகிறார். நேற்று நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது GMC Yukon ரக பெரிய காரில் Sunset Boulevard ல் இருந்து Allenford Avenue க்கு சென்று கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அர்னால்ட் சுவார்செனேகர் ஏற்பட்ட விபத்து:

அப்போது Riviera Contry Club அருகே சென்று கொண்டிருந்த போது அர்னால்டின் கார் மீது குறுக்கே வந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அர்னால்ட் காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பி உள்ளார். ஆனால், பெண் ஒருவர் மற்றும் சிறு காயமடைந்துள்ளார். இவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி சிகிக்சை அளிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இந்த விபத்தில் நான்கு கார்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணையில் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறினார்.

வைரலாகும் விபத்து புகைப்படங்கள்:

இதனை தொடர்ந்து லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த விபத்து நடந்தது எப்படி? எதனால்? என்பது இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த விபத்து தொடர்பான போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அர்னால்ட் உடைய உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விபத்தில் சிக்கிய பெண் குறித்து அவசர சேவை மையத்தை தொடர்பு கொண்டு அர்னால்ட் விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Advertisement