மும்தாஜ், ரித்விகா டாஸ்க்..! பிக் பாஸை அசிங்கப்படுத்திய ஆர்த்தி.! நெத்தி அடி.!

0
1161
Aarthi
- Advertisement -

காமெடி நடிகையும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான ஆர்த்தி பிக் பாஸ் 2 வை விமர்சிக்கும் ஒரு வாடிக்கையாளராகவே மாறிவிட்டார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நிகழ்ச்சி குறித்தும், போட்டியாளர்கள் குறித்தும் விமர்சித்து அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார் நடிகை ஆர்த்தி.

-விளம்பரம்-

Bigg-boss

- Advertisement -

கடந்த சில நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் போன் டாஸ்க் நடைபெற்று வருகிறது, அதில் போனில் அழைப்பு வரும் நபர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க அந்த போனில் யாரை குறிப்பிடுகின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து பிக் பாஸ் கூறும் டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.

இதில் சென்ராயன், ஐஸ்வர்யா, யாஷிகா, விஜயலக்ஷ்மி ஆகியோர் டாஸ்க்கை செய்து முடித்துவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில், ரித்விகா அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட வேண்டும் என்றால் மும்தாஜின் தலை முடியை எலக்ட்ரிக் கிறீன் அதாவது பளீர் பச்சை நிறத்தில் கலர் செய்து கொள்ளவேண்டும் என்று கூறுகிறார், அதற்கு மும்தாஜ் என் அம்மாவிற்காக கூட அதை நான் செய்யமாட்டேன் மாட்டேன் என்று கூறிவிடுகிறார்.

-விளம்பரம்-

இந்த ப்ரோமோ விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை ஆர்த்தி, பாசத்தை காட்ட எவ்வளவோ வழி இருக்கு பைத்தியக்கார டாஸ்க் பண்ணனும்னு அவசியமில்ல. நாமினேஷனிற்கு பயப்படும் ஆள் ரித்விகா இல்லை பார்ஷியாலிட்டி(பாரபட்சம்) பிக் பாஸ் என்று பதிவிட்டுள்ளார். இதில் ஆர்த்தி பிக் பாஸ் பாரபட்சம் பார்த்து நடந்து கொள்கிறார் என்று குறிப்பிட்டதற்கு காரணமும் இருக்கிறது.

ஏற்கனவே, நடிகை ஆர்த்தி, பிக் பாஸ் ஐஸ்வர்யாவிற்கு மிகவும் ஆதரவாக இருபதை குறிப்பிட்டு ஐஸ்வர்யாவின் அம்மா தான் பிக் பாஸ் மாமியார் என்று ட்விட்டரில் கிண்டலடித்திருந்தார். அதே போல பிக் பாஸில் தற்போது நடைபெற்று வரும் டாஸ்கில் ஐஸ்வர்யாவிற்கு மட்டும் மிகவும் சுலபமாக கன்வின்ஸ் ஆககூடிய டாஸ்க்கை கொடுத்திருந்தார் பிக் பாஸ். ஆனால், மற்ற போட்டியாளர்கள் அனைவருக்குமோ வலி நிறைந்த, மிகவும் தோற்றத்தை பாதிக்கக்கூடிய சில கஷ்டமான டாஸ்க்கை தான் கொடுத்து வருகின்றனர். அதனால் தான் பிக் பாஸ் மிகவும் பாரபட்சம் காட்டி நடந்து வருகிறார் என்று நடிகை ஆர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement