எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்ட கேள்விக்கு அருள்நிதி அளித்திருக்கும் பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அருள்நிதி. இவர் இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த வம்சம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் உதயன், மௌனகுரு, ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால், சமீப காலமாக இவருடைய சில படங்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இருந்தாலும், இவர் தன்னுடைய விடா முயற்சியினால் படங்களில் நடித்து வருகிறார். மேலும், அருள்நிதி தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அருள்நிதி 2015ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிழ் என்ற ஒரு மகன் இருக்கிறான்.
இதையும் பாருங்க : நீங்க தான் அடுத்த சிவகார்த்திகேயன், CWC பிரபலத்தை பாராட்டிய பார்த்திபன் (இவரும் ரொம்ப நாளா கஷ்டப்பட்ராரு)
d-block படம்:
சமீபத்தில் தான் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், சமீப காலமாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்துள்ள படம் d-block. இந்த படத்தை விஜயகுமார் ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். எம்என்எம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அருள்நிதி, அவந்திகா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
டிமாண்டி காலனி 2 படம்:
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து டிமாண்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் டிமாண்டி காலனி. இந்த படம் முழுக்க முழுக்க திகில் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
அருள்நிதி அளித்த பேட்டி:
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அருள்நிதி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அருமையாக பதிலளித்து இருக்கிறார். அப்போது அவரிடம், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அருள்நிதி கூறியிருந்தது, எதிர்காலத்தை பற்றி நான் யோசிக்கவில்லை. இப்போதைக்கு மக்களுக்கு சரியான படங்கள் கொடுக்க நினைக்கிறேன்.
அரசியல் குறித்து அருள்நிதி சொன்னது:
நான் நடிகன் என்ற பெயர் எடுக்கணும் என்பது தான் என் மனதில் இருக்கும் விஷயம் என்று கூறியிருக்கிறார். இப்படி இவர் அளித்திருக்கும் பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இவர்களுடைய மொத்த குடும்பமே அரசியலை சார்ந்திருக்கிறது. அருள்நிதியின் தந்தையும் அரசியலில் இருக்கிறார். கருணாநிதி தொடங்கி அவர்களுடைய பேரன்கள் வரை என பலரும் அரசியலில் இருக்கிறார்கள். தற்போது உதயநிதி நடிகராக இருந்தும் அரசியலில் இருக்கிறார். ஆகையால், கண்டிப்பாக அருள்நிதியும் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.