அடுத்தடுத்து நிறுத்தப்பட்ட சீரியல்கள், விஜய் டிவிக்கு கும்புடு போட்டு சரண்யா எடுத்துள்ள முடிவு (இதாவது நிலைக்கட்டும்)

0
1065
saranya
- Advertisement -

அடுத்தடுத்து சீரியல்கள் நிறுத்தப்பட்டதால் தற்போது திடீர் முடிவை எடுத்துள்ளார் சீரியல் நடிகை சரண்யா. இளசுகள் மனதை கொள்ளை அடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். ஆரம்பத்தில் நடிகை சரண்யா கலைஞர் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்தார். அதன் பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் பணியாற்றினார். ஆனால், அந்த தொலைக்காட்சியில் இரண்டு மாதங்கள் மட்டுமே தான் இருந்தார். பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற பல தொலைக்காட்சிகளில் செய்தி நிருபராக பணியாற்றினார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is absab.jpeg

மேலும், இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற படத்திலும் நடித்து உள்ளார். இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த நெஞ்சம் மறைப்பதில் சீரியலில் நடித்து இருந்தார். பின் சன் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட ரன் என்ற தொடரில் நடித்து வந்தார். ஆனால், சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார்.

இதையும் பாருங்க : ராக்கிக்கு வழிவிடும் ‘ரா’ ஏஜென்ட் ராகவன் – பீஸ்ட் தியேட்டர்களை காலி செய்யும் கேஜிஎப் 2

- Advertisement -

நிறுத்தப்பட்ட ஆயுத எழுத்து :

அதன் பின்னர் இவர் ஆயுத எழுத்து சீரியலில் கமிட் ஆனார். இவருக்கு முன்பாக அந்த தொடரில் ஸ்ரீத்து கிருஷ்ணன் தான் நடித்து வந்தார். அவர் விலகிய பின்னர் தான் இவர் இந்த தொடரில் கமிட் ஆனார். ஆனால், இந்த சீரியலும் திடீரென்று நிறுத்தப்பட்டது. பின்னர் கிட்டத்தட்ட இவர் ஓராண்டுகள் எந்த சீரியலிலும் நடிக்காமல் தான் இருந்தார். இப்படி ஒரு நிலையில் தான் சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ தொடரில் மீண்டும் நடிக்க வந்தார்.

This image has an empty alt attribute; its file name is aebean.jpg

50 எபிசோடுகளுடன் நிறுத்தும் :

இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக பிரஜன் நடித்து வந்த நிலையில் அவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் இருந்து விலகினார். பின் அவருக்கு பதில் முன்னா நடிக்க வந்தார். 50 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் சமீபத்தில் திடீரென்று நிறுத்தப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டது குறித்து சரண்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

சரண்யா போட்ட பதிவு :

‘இந்த கஷ்டமான நேரத்தில் அமைதியாக இருக்க விரும்புகிறேன். கடினமான காலத்தில் எனக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன். உழைப்பை உதாசீனப்படுத்தும் போது தான் மிகவும் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது’ என்று பதிவிட்டு இருந்தார். மேலும் இது குறித்து முன்னாவும் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is image-53-1024x587.png

ஜீ தமிழுக்கு சென்ற சரண்யா :

அதில் ‘நடப்பது எல்லாம் நன்மைக்கே’ என்று குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். இவர்களின் பதிவிற்கு பலர் ஆறுதலாக கமெண்ட் செய்துவந்தனர். அடுத்தடுத்து விஜய் டிவி சீரியல்கள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது சரண்யா விஜய் டிவியை விட்டுவிட்டு ஜீ தமிழுக்கு சென்று இருக்கிறார். விரைவில் துவங்க இருக்கும் புதிய சீரியலில் சரண்யா நடிக்க இருக்கிறாராம். மற்றபடி தொடர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

Advertisement