சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த அருவி பட இயக்குனர் – அட, இவருக்கும் Skக்கும் இப்படி ஒரு உறவா.

0
179
arun
- Advertisement -

யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்து முடிந்த அருவி திரைப்படத்தின் இயக்குனர் உடைய திருமண புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே பிரபலங்களின் திருமணங்கள் விமர்சையாக இல்லாமல் நடந்து வருகிறது. அதிலும் கடந்த சில மாதங்களாகவே திரைப்பிரபலங்கள் யாருக்கும் தெரியாமல் தங்கள் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணங்களை செய்து வருகிறார்கள். பின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் தற்போது இயக்குனர் அருண் பிரபு இணைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் அருண் பிரபு புருஷோத்தமன். இவர் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளிவந்த படம் அருவி. இந்தப்படம் சமூக- அரசியல் கதையை மையமாகக் கொண்டது.அதோடு இந்தப் படத்தின் மூலம் தான் அருண் பிரபு தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். மேலும், இந்த படத்தை எஸ்ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரித்து இருந்தார்கள்.

- Advertisement -

அருண் பிரபு திருமண புகைப்படங்கள் இயக்கிய படங்கள்:

ஒரு கண்ணியமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண் ஒருவர் பொருளாதார சமூகவியல் சூழலில் தன்னை பொருத்திக் கொள்ள சிரமப்படுகிறார். பின் அந்த பெண் சமூகத்தால் படும் வேதனையை காட்டும் படமாக உள்ளது. இந்த படத்தில் அருவியாக அதிதி பாலன் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக இயக்குனருக்கு பல விருதுகள் கிடைத்தது என்று சொல்லலாம். இந்த படத்தை தொடர்ந்து இவர் இரண்டாவது படமாக வாழ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண் பிரபு திருமண புகைப்படங்கள்:

இந்நிலையில் இயக்குனர் அருண் பிரபு உடைய திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நேற்று இயக்குனர் அருண் பிரபு- டீனா இருவருக்கும் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களுடைய திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் மணமக்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடைய திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. மேலும், இயக்குனர் அருண் பிரபு இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

அருண் பிரபு, சிவகார்த்திகேயனின் உறவினர்:

மேலும், அருண் பிரபு சிவகார்த்திகேயனின் உறவினர் என்பது பலர் அறிந்திராத ஒன்று. வாழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து சிவகார்த்திகேயன் பதிவிட்ட போது, ”என் அப்பாவின் பிறந்தநாளான இன்று ‘வாழ்’ படத்தின் டைட்டிலையும் போஸ்டரையும் வெளியிடுவதில் பெருமைகொள்கிறேன். அது மட்டுமல்லாது என் தம்பியான அருண் பிரபு புரோஷத்தமன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். என்னுடைய முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்துக்கும் வரவேற்பு கொடுப்பீர்கள் என நம்புகிறேன்” என்று கூறி இருந்தார்.

சிவகார்த்திகேயன் படங்கள்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. தற்போது சிவகார்த்தியன் அவர்கள் அயலான், டான் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் கமல் தயாரிப்பில் உருவாகயிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் அயலான், டான் படத்தின் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement