காதலால் ஜாதகத்தில் இப்படி ஒரு பிரச்சனை இருந்ததாம் அருண் விஜய்க்கு. வீடியோவை பாருங்க.

0
17218
arunvijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தல அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது . இதனை தொடர்ந்து தற்போது அருண் விஜய் தமிழ், தெலுங்கு என்று இரு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘சாஹோ’ என்ற படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். நடிகர் அருண் விஜய் அவர்கள் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், அருண் விஜய் உடன் பிறந்த சகோதரிகள் வனிதா விஜயகுமார், ஸ்ரீதேவி, ப்ரீத்தா, கவிதா, அனிதா இவர்கள் அனைவருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். இது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-
Image result for Arun Vijay With sisters

ஆனால், அருண் விஜய் மட்டும் வீட்டில் பார்த்த பெண்ணை (அரேஞ்ச் மேரேஜ்) திருமணம் செய்து கொண்டார். இது குறித்து சமீபத்தில் பேட்டி எடுத்த போது அதில் அவர் கூறியது, எங்க வீட்டில் எல்லாருமே லவ் மேரேஜ். அதனாலே நான் எங்க அம்மா, அப்பா பாக்குற பெண்ணை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருந்தேன். அதனாலேயே நான் யாரையும் காதலிக்கவில்லை. என் வாழ்க்கையில் நிறைய காதல் வந்தது. ஆனால், என் அம்மா என்னை பயமுறுத்தி வைத்து இருந்தார்கள். அது என்னனா, லவ் பண்ண போலீஸ், கேஸ் எல்லாம் அலையுனும் என்று என் ஜாதகத்தில் இருப்பதாக என் அம்மா கூறினார். அதனாலேயே தான் நான் லவ் பண்ணல. எவ்வளோவோ லவ் ப்ரபோசல் வந்தது. ஆனால், அம்மா சொன்ன ஜாதக பயத்தாலேயே நான் லவ் பண்ணல. பிறகு நம்ம மிஸ் பன்னிட்டோமோ என்று பீல் பண்ணி இருக்கேன்.

- Advertisement -

இதையும் பாருங்க : நாளை வெளியாகப்போகும் ‘மாஸ்டர்’ படத்தின் குட்டிக் கதை இதுதானா ?

அப்புறம் அப்பா, அம்மா பார்த்த முதல் பொண்ணு தான் ஆர்த்தி. முதல் பொண்ணே பிடித்துப் போய் சரின்னு சொல்லிட்டு கல்யாணம் செய்து கொண்டேன் என்று கூறினார். தற்போது இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்ற படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அவர்கள் அருண் விஜய்க்கு வில்லனாக நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:15 நிமிடத்தில் இருந்து பார்க்கவும்

அதோடு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் என்பவர் இயக்கவுள்ள ‘பாஸ்கர்’ என்ற புதிய படத்திலும் அருண் விஜய் நடித்து வருகிறார். அதோடு மூடர் கூடம் நவீன இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்சரா ஹாசன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று இறுதி கட்டத்திற்கு வந்து இருக்கிறது. இந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement