சிவகார்த்திகேயன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அருண் விஜய் – மாவீரன் படம் குறித்து அவர் போட்ட பதிவு.

0
1635
- Advertisement -

சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் குறித்து அருண்விஜய் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. தன்னுடைய கடின உழைப்பினாலும், தமிழ் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தினாலும் போராடி இன்று தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-
Maaveeran

இவர் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். அதன் பின் இவர் படங்களில் நடித்து தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், இறுதியாக இவரது நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

- Advertisement -

இந்த நிலையில் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அதிதி, சுனில், மிஸ்கின், யோகி பாபு, சரிதா என்று பலர் நடித்து இருந்தனர். பேன்ஸி படமாக உருவாகி இருந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

மேலும், இதுவரை இந்த படம் 50 கோடி வசூல் செய்து இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் அருண் விஜய் போட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ இப்போதுதான் மாவீரன் படத்தைப் பார்த்தேன்.. முழுமையாக ரசித்தேன். சகோதர் சிவகார்த்திகேயன் நீங்கள் உங்களுக்கான கேரக்டரை உணர்ந்து எளிமையா, அழகா நடிச்சிருக்கீங்க. யோகிபாபுவின் காமெடியையும், விஜய் சேதுபதியின் அசசரீ குரலையும் விரும்பி பார்த்தேன். இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அருண் விஜய் சிவகார்த்திகேயன் குறித்து மறைமுக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘சீமராஜா’ திரைப்படம் வெளியான போது நடிகர் அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும் தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் கொந்தளித்து அருண் விஜய்யை தாக்கி கமெண்ட் போட்டு இருந்தார்கள்.

ஆனால், அருண் விஜய் என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டு உள்ளது. சற்று முன்பு தான் அது சரி செய்யப்பட்டது. எனவே இதற்கு முன்பு வந்த பதிவுகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம் என்று கூறி இருந்தார். இருப்பினும் அருண் விஜய், சிவகார்த்திகேயனை குறிப்பிட்டு தான் அந்த பதிவை போட்டார் என்று பலரும் தற்போது வரை நினைத்துகொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு அருண் விஜய் மற்றும் சிவகார்திகேயன் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Advertisement