‘இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்கன்னு யோசிச்சி வாக்கு போடுங்க – விஜய் சேதுபதியின் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ

0
255
Vijaysethuapthy
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

-விளம்பரம்-

திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். பின் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இப்படி அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்தும், தீவிரமாக ஆலோசனைகளை நடத்தியும் வருகிறார்கள். மேலும், இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

- Advertisement -

தேர்தல் நெருங்குவதால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து தேர்தல் குறித்த விழிப்புணர்வுகளை பிரபலங்களை வைத்து செய்து வருகின்றனர். அந்த வகையில்  தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என விஜய் சேதுபதி வலியுறுத்தும் தேர்தல் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் பேசி இருக்கும் விஜய் சேதுபதி ‘ “நாம எல்லாரும் ஆசையா எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தல் வந்துவிட்டது. வழக்கமாக தேர்தல் வரும்போது எல்லாருக்கும் ஒரு மனப்பான்மை இருக்கும்.

யார் வந்தா நமக்கு என்ன? இல்லை யார் காசு கொடுக்கிறார்களோ அவங்களுக்கு ஓட்டு போடுவோம். ஒட்டு போட்டு ஒன்னும் ஆகப் போறதில்லை, இது போன்ற மனநிலையை தூக்கி ஓரம் வைச்சிடுங்க. நாம, நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும்.  காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது.

-விளம்பரம்-

உங்களுக்கு புடிச்சவங்க புடிக்காதவங்க யாராக இருந்தாலும் சரி, அவுங்க யார் என்னன்னு தெரிந்து கொள்ளுங்கள். அவங்களால நமக்கு என்ன பயன் என்பதை விட இந்த நாட்டிற்கு என்ன பயன் என்பதை யோசித்து பாருங்க. அதில் நம்முடைய சுயநலமும் இருக்கு. நாமெல்லாம் சேர்ந்தது தானே நாடு. நாம் என்பது இன்றைக்கும் மட்டும் பார்ப்பதா? அல்லது நாளைக்கு நம்முடைய குழந்தைகள் வாழப்போகிற எதிர்காலைத் பற்றியும் சிந்திக்கிறதா.

நம்முடைய குழந்தைகளுடைய எதிர்காலம் ரொம்ப முக்கியம். நம்மை ஆளப்போவது யார். ஆட்சியை யார்கிட்ட கொடுக்கப் போறோம். அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு. இதுக்கு முன்னாடி அவுங்க என்ன செஞ்சிருக்காங்க, என்ன சொல்றாங்க என்பதை அலசி ஆராஞ்சி ஓட்டு போடுங்க. இதுவரை அரசியல் செய்திகளை கேட்கவில்லை என்றாலும் பேசவில்லைன்றாலும் பார்க்கவில்லை என்றாலும் சரி, இன்றையிலிருந்து ஓட்டு போடுகிற நாள் வரை அரசியல் பற்றி பேசுங்க. தெளிவா, சிந்தித்து செயல்பட்டு வாக்களியுங்க’ என்று கூறியுள்ளார்

Advertisement