ஒர்க் அவுட் ஆனதா மாமன் – மச்சானின் முதல் காம்போ – யானை முழு விமர்சனம் இதோ.

0
1746
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அருண் விஜய். தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் யானை. இயக்குனர் ஹரி இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, போஸ் வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்திருந்த யானை திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஊருக்குள் கௌரவமாக பிஆர்வி குடும்பம் வாழ்ந்து வருகிறது. இந்த குடும்பத்தின் இளைய மகனாக இருப்பவர் தான் ரவி(அருண் விஜய்). குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரகனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். என்னதான் அருண் விஜய் தனது அண்ணன்களை உடன் பிறந்தவர்கள் என்று பார்த்தாலும் அவர்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவனாக தான் நினைக்கிறார்கள். இன்னொரு பக்கம் பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பகையை தீர்த்துக் கொள்ள ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார் வில்லன் லிங்கம்.

- Advertisement -

படத்தின் கதை:

அதை சுமுகமாக முடிக்க நினைக்கிறார் அருண் விஜய். அதற்காக அவர் பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடிகிறது. இந்த சமயத்தில் பிஆர்வி குடும்பத்தை ஒட்டுமொத்தமாக உருக்குலையும் விதத்தில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. இதில் அருண் விஜய் சிக்கிக்கொள்கிறார். இதனால் உடனடியாக அருண் விஜயை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்கள் அண்ணன்கள். இதன் பின் இறுதியில் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? வில்லன் பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தது? அருண்விஜய் இதெல்லாம் எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் அருண் விஜய்

படத்தில் இளைய மகனாக ரவி என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். வழக்கம் போல் இல்லாமல் இந்த படத்தில் பயங்கர மாஸ் என்ட்ரி கொடுத்து நடித்திருக்கிறார் அருண் விஜய். ஆக்ஷன், காதல், சென்டிமென்ட், பாசம் என அனைத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய். குறிப்பாக, அவர் சண்டைக்காட்சிகளில் மிரட்டி இருக்கிறார் என்று சொல்லலாம். இவரை அடுத்து கதாநாயகியாக வரும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிற நடிகர்கள் குறித்த தகவல்:

நடிகை ராதா தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அண்ணனாக வரும் சமுத்திரகனி வழக்கம்போல் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிரட்டியிருக்கிறார். இதனால் சமுத்திரக்கனிக்கு ஒரு தனி பாராட்டு என்று சொல்லலாம். வில்லனாக வந்து கடைசியில் அனைவரையும் மிரட்டி இருக்கிறார் நடிகர் ராமச்சந்திர ராஜா. இவர்களுடன் அம்மு அபிராமியின் நடிப்பும் படத்திற்கு பலத்தை சேர்த்திருக்கிறது. யோகி பாபு நகைச்சுவை அருமையாக இருக்கிறது. இவர்களுடன் படத்தில் நடித்த நடிகர்களும் தங்கள் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து இருக்கின்றார்கள்.

இயக்குனர் ஹரி இயக்கம் சூப்பர். ஆனால், திரைக்கதை சில இடங்களில் சலிப்பு தட்டி இருக்கிறது. நன்றாக சென்றுகொண்டிருந்த கதையில் தேவையில்லாமல் சில நகைச்சுவை காட்சிகள் வந்திருப்பது பார்ப்பவர்களை சலிப்பு தட்ட வைக்கிறது. மேலும், பாடல்களும் பெரிதளவு ரசிகர்களை கவரவில்லை. ஆனால், ஜிவி பிரகாஷின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறது. முக்கியமாக சண்டை காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. அனல் அரசின் ஸ்டண்ட் மாஸ் காட்டி இருக்கிறது. மொத்தத்தில் கமர்சியல் படமாக யானை படம் இருக்கிறது.

பிளஸ்:

அருண்விஜய், ராதிகா, சரத்குமார், சமுத்திரகனி, அம்மு அபிராமி நடிப்பு வேற லெவல்.

ஹரியின் இயக்கம் சூப்பர்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.

அனல் அரசன் ஸ்டன்ட் மாஸ்.

மைனஸ்:

சில இடங்களில் தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள்.

பாடல்கள் படத்திற்கு ஒட்டவில்லை.

ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பு தட்டி இருக்கிறது.

மொத்தத்தில் கமெர்சியல் ரசிகர்களுக்கு ‘யானை படம்- பிளிறுகிறது’

Advertisement