அம்மன் முதல் அருந்ததி வரை பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் காலமானார்.!

0
204

தெலுங்கில் 100 படங்களுக்கு மேல் இயக்கிய பிரபல இயக்குனர்
 கொடி ராமகிருஷ்ணா உடல் நலக் குறைவால் இன்று (பிப்ரவரி 22) காலமானார். தெலுங்கில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த இவர் அனுஷ்காவின் ‘அருந்ததி’ படத்தையும் இயக்கினார்.

ஒரு காலத்தில் மார்கெட் இழந்து தவித்து வந்த அனுஷ்காவிற்கு அருந்ததி படத்தின் மூலம் மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர் இயக்குனர் கொடி ராமகிருஷ்ணா.அதுமட்டுமல்ல 1995 ஆம் ஆண்டு வெளியான ‘அம்மன்’ படத்தையும் இவர் தான் இயக்கினார்.

கடந்த சில காலமாக உடல் நலக்குறைவால் தவித்து வந்த இவர் நேற்று இரவு உடல் நலம் மோசமடைந்து ஹைதராபாத் மாநிலம் கச்சிபௌலியில் உள்ள ஏ ஐ ஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. இவரது இழப்பு தெலுங்கு சினிமாவை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2014 ஆம் ஆண்டு வெளியான அவதாரம் படம் தான் இவர் இயக்கிய கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.