தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே வகையில் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.
தமிழில் இன்னும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்க்கும் நேரம் இவருக்கு இன்னும் கூடி வரவில்லை. தற்போது பிரபு தேவாவுடன் யங் மங் சங் படத்தில் நடித்து சிறு வயதிலேயே திரை துறைக்கு வந்த லட்சுமி மேனன் நடிகர் விஷாலை காதலிக்கிறார் என்ற செய்திகள் கூட பரவியது.
ஆனால், வழக்கம் போல அந்த செய்தியை இருவருமே மறுத்து வந்தனர். சமீபத்தில் லட்சுமி மேனனுக்கு திருமணம் கூட நடக்க போகிறது என்ற செய்திகள் கூட பரவியது. மலையாளத்தில் இரண்டு, முன்று படங்கள் மட்டுமே நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவால் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது படிப்பு பாதி நடிப்பு மீதி என இருந்து இவருக்கு தற்போது அவர் வீட்டார் மாப்பிள்ளை பார்த்துவருவதாக செய்திகள் வெளியாகிறது. இவருடைய திருமணம் குறித்த செய்தி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. அப்போ அவர் சொன்ன மாதிரி லவ் மேரேஜ் இல்லையா.