20 வருட போராட்டம், கைகொடுக்காத சினிமா – திருமணம் கூட செய்யாமல் இப்படி ஒரு வேலையை செய்து வரும் அருவி பட நடிகர்.

0
537
kuppusamy
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் மூலமாக தமிழ்நாட்டில் எங்கேயோ இருக்கும் ஒரு சில பேரின் வீடியோக்கள் புகைப்படங்கள் மற்றும் அவர்களது திறமையை வைத்து சினிமா வாய்ப்புகள் அவர்களைத் தேடி வீட்டுக்கே வருகிறது. 25, 30 வருடங்களுக்கு முன் சமூகவலைதளங்கள் எல்லாம் இல்லாத சமயத்தில் ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் சொந்த ஊரைவிட்டு விட்டு சென்னை வந்து இயக்குனர்களின் ஆபீஸ், தயாரிப்பாளர்கள் ஆபீஸ் என்று சினிமாவில் இருக்கும் ஒவ்வொருத்தரையும் சந்தித்து புகைப்படங்களை கொடுத்து வாய்ப்பு தேடி அலைய வேண்டும் அப்படி அப்படி 20 வருடங்களுக்கு முன்பு சினிமா வாய்ப்பு தேடி கொண்டு சென்னைக்கு வந்தவர் தான் அருவி பட நடிகர் குப்புசாமி.

-விளம்பரம்-

சினிமா ஆசை :-

குப்புசாமி ஆரம்ப காலத்தில் தனது ஊரில் இருந்து வார இதழ், பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ் எழுதுதல் கதை எழுதுதல் போன்றவை எழுதி தபால் மூலம் அனுப்புகிறார். இவரது படைப்புகள் எல்லாம் வெளியாகி சிறந்த விளங்கியதால் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்க்காக காத்திருந்த குப்புசாமிக்கு சினிமா ஆசை வந்தது. 2004 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரத்தில் இருந்து சென்னை வந்து சேர்கிறார் குப்புசாமி. சென்னை வந்த குப்புசாமி தீப்பெட்டி சைசில் ஒரு ரூம் எடுத்து தங்குகிறார். மறுபடியும் அங்கிருந்து அவருடைய பத்திரிக்கைக்கு வாரஇதழுக்கு தபால் அனுப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சினிமா வாய்ப்புக்காக ஆபீஸ் ஆபீஸ்சாக ஏறி இறங்குகிறார்.

- Advertisement -

சென்னையில் கிடைத்த நண்பர் :-

குப்புசாமி தனது பத்திரிக்கை வாரஇதழுக்கு அனுப்புவதற்கு போஸ்ட் கார்டு வாங்க தினசரி போஸ்ட் ஆபீஸ் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கங்காதர் குப்புசாமி இடம் என்ன செய்கிறீர்கள் தினமும் எவ்வளவு போஸ்ட் கார்டு வாங்கிறிர்கள். என்று கேட்ட பொழுது அவரிடம் குப்புசாமி அதற்கான காரணத்தையும் அவருடைய சினிமா ஆசையும் பற்றி கூறியுள்ளார். கங்காதர் உன்னுடைய சினிமா ஆசை எல்லாம் சரிதான் உனது செலவுக்காக நீ என்ன செய்கிறாய் உனது சாப்பாட்டுக்காகவாவது ஒரு வேலையை பார் என்று சொல்லி இருக்கிறார். சொன்னது மட்டும் இல்லாமல் அந்த தபால் நிலையத்தில் தற்காலிகமாக வேலை ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார் கங்காதர்.

நண்பர் மூலம் சினிமாவின் முதல் படி :-

இப்படி தனது நண்பர் கங்காதர் வாங்கி கொடுத்த வேலையை செய்து கொண்டே பத்திரிகைகளுக்கு வாரஇதழ்களுக்கும் எழுதிக் கொண்டே சினிமா வாய்ப்புக்காக ஆபீஸ் ஆபீஸ்சாக ஏறி இறங்கி தனது சினிமா கனவுகளுக்காக முன்நோக்கி நகர்ந்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது கங்காதே நண்பர் ஒருவர் சினிமாவில் படம் எடுப்பதாக சொல்லி இருக்கிறார். தன் நண்பனை பற்றி அவரிடம் பேசி அவருக்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டு “நந்தா நந்திதா” என்ற படத்தில் குப்புசாமிக்கு ஒரு பட வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். இதுதான் குப்புசாமியின் சினிமா வாழ்க்கைக்கு முதல் படியாகும் அதன்பின் கங்காதார்ம் குப்புசாமி நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

-விளம்பரம்-

அருவி பட வாய்ப்பு :-

2014 ஆம் ஆண்டு வரை சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது அருவி படத்தின் நடித்த கேரக்டருக்கு 80 பேர் செலக்ட் பண்ணி வைத்திருந்தவர்கள் நான் நான் 81 வது ஆளாக சென்றேன். அவர் இயக்குனர் என்னிடம் ஸ்கீரிப்ட் பேப்பரை கொடுத்துவிட்டு கேரக்டரை உள்வாங்கி நடிக்க வேண்டும் என கூறினார் அருவி படத்தில் இருந்த நாங்கள் அனைவருமே அப்படியே அந்த கேரக்டருடன் மூழ்கி போய் தான் நடித்திருந்தோம். என்று கூறினார் இந்த படத்தில் ஏழாம் வாய்ப்பாடு சொல்லும் அந்த காட்சி என்னை நிறைய பேருக்கு அறிமுகப்படுத்தி வைத்தது எங்கு சென்றாலும் என்னை வாய்ப்பாடு சொல்லு இல்லையென்றால் உன்னை சுட்டு விடுவேன் என்று அனைவரும் என்னிடம் கேட்பார்கள் அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் என தெரிவித்தார்.

இன்னுமும் சினிமாவை தேடிக்கொண்டே குப்புசாமி :-

என் குடும்பத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் அப்பா அம்மா இருவரும் இல்லை இப்போது. நான் காலேஜில் மெடிக்கல் கோர்ஸ் டிகிரி முடித்துள்ளேன் இரண்டு சகோதரிகள் உள்ளனர் அவர்கள் கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிட்டனர். வீட்டின் மூத்த பையன் நான் தான் எனக்கு இப்போது பெண் தேடிக் கொண்டும் சினிமாவை தேடிக்கொண்டோ உள்ளேன் கொரியர், தபால் நிலையத்தில் போன்ற டெலிவரி இடங்களில் வேலை பார்ப்பேன். ஷூட்டிங் இருக்கும் நேரங்களில் அவர்களிடம் சொல்லிவிட்டு ஷூட்டிங் சென்று விடுவேன் இப்படியாக நாட்கள் செல்கின்றனர். என்ன புன்னகையுடன் பேசிவிட்டு அவரது கொரியர் வேலையே பார்க்க சென்று விட்டார் குப்புசாமி.

Advertisement