பணம் வேணும்னா வேற சீரியலுக்கு போன்னு சொன்னாங்க – செம்பருத்தி வெற்றி விழாவால் அசிங்கப்பட்டுள்ள நடிகை.

0
754
Sembaruthi
- Advertisement -

செம்பருத்தி சீரியலால் நான் எல்லாத்தையும் இழந்தேன் என்று நடிகை மௌனிகா அளித்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மக்களிடையே அதிக ஆதரவும், அன்பும் பெற்ற சீரியல் செம்பருத்தி. இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்தது. ஜீ தமிழில் ஒளிபரப்பான டாப் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்தது. மேலும், இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரின் கதை அம்சத்தை கொண்டு எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார். கதாநாயகியாக ஷபானா நடித்து இருந்தார். பின் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் சீரியல் இருந்து விலகி விட்டார். இவருக்கு பதில் தொகுப்பாளர் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர்களுடைய ஜோடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் இருந்து இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றது. சமீபத்தில் தான் அனைவரும் எதிர்பார்த்த கிளைமேக்ஸ் வந்தது.

- Advertisement -

செம்பருத்தி சீரியல்:

மேலும், கிளைமாக்ஸ் எபிசோட் மட்டும் பல மணி நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒளிபரப்பாகி இருந்தது. இறுதியில் வில்லிகள் நந்தினி, வனஜா ஆகியோர் இறப்பது போல காட்டப்படுகிறது. அகிலாண்டேஸ்வரியும் மரணமடைந்து விடுகிறார். செம்பருத்தி சீரியல் முடிந்தபின் நடிகர்கள் மற்றும் குழுவினர் கொண்டாடும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் நடிகர்கள் மற்றும் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர். ஆனால், வில்லி நந்தினி ரோலில் நடித்திருந்த நடிகை மௌனிகா தன்னை அந்த ஷோவில் அசிங்கபடுத்தி விட்டார்கள் என ஜீ தமிழ் மீது புகார் கூறி இருந்தார்.

நடிகை மௌனிகா அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நடிகை மௌனிகா பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, செம்பருத்தி சீரியலில் வில்லி நந்தினி ரோலில் நடித்தேன். அந்த சீரியலுக்காக நிறையவே இழந்திருக்கேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு என் குடும்பத்தையே நான் தான் பார்த்துக் கொள்ளனும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சமயம் பார்த்து செம்பருத்தி சீரியலில் நடிக்க அதிக நாட்கள் தரவில்லை. அதனால் சும்மாவே வீட்டில் இருந்தேன். அப்ப தான் வேற சீரியலில் டபுள் பேமண்ட்டில் என்னை நடிக்கக் கூப்பிட்டார்கள்.

-விளம்பரம்-

அந்த சீரியலில் கமிட்டாகி சூட்டிங்க்கு ரெடியாகும் சமயத்தில் சேனல் இருந்து போன் வந்தது. நீங்க இந்த ப்ராஜக்ட் முடிக்காம ஏன் வேற சீரியலில் நடிக்க சம்மதித்தீர்கள்? யாரை கேட்டு முடிவு பண்ணீர்கள்? என்றெல்லாம் கேட்டார்கள். என் குடும்ப சூழலை சமாளிக்க நான் வேற என்ன பண்ண முடியும்! அதற்குப்பின் பலமுறை பேசி, நீங்க வாங்க நம்ம சேனலில் இன்னொர ப்ராஜெக்ட் பண்ணலாம் என்று சொல்லியிருந்தார்கள். சீரியல், சேனல் வேணும் என்றால் இங்கேயே இருங்கள். இல்ல பணம் வேணும் என்றால் வெளியில் வேற சீரியல் பண்ண போங்கள் என்று சொன்னார்கள். அந்த சமயம் நான் கார் வாங்கி இருந்தேன். அதனால் பண ரீதியாக கொஞ்சம் பிரச்சனையாக இருந்தது. இருந்தாலும் செம்பருத்தி சீரியல் தான் முக்கியம் என்று வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை.

மூன்று மாதம் வீட்டிலேயே சும்மா இருந்தேன்.

மூன்று மாதம் வீட்டிலேயே சும்மா இருந்தேன். அதற்கு பிறகு தான் எனக்கு இரட்டை ரோஜா போன்ற தொடர்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 4 வருஷமாக பல பிரச்சனையும் எதிர்கொண்டு செம்பருத்தி தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த சீரியலின் வெற்றி விழாவில் எல்லோருக்கும் தனித்தனியாக வீடியோ, ஆடியோ எல்லாம் போட்டு நினைவு பரிசும் கொடுத்து இருந்தார்கள். எனக்கு அந்த மாதிரி எதுவும் பண்ணவில்லை. மேடைக்கு கூப்பிட்டு எனக்கான அங்கீகாரத்தை ஏன் கொடுக்க இல்லை? நான் எந்தவிதத்தில் குறைந்து போய் விட்டேன் என்று எனக்கு தெரியவில்லை? நானும் மத்தவங்களை மாதிரி கொட்டும் மழையிலும், கொரானா காலத்திலும் சூட்டிங் போயிட்டு இருந்தேன். அந்த மேடையிலேயே அவர்களிடம் கேள்வி கேட்டேன்.

கேட்க கூடாது என்று நினைத்தேன் :

ஆனால், அவங்க யாரும் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. எனக்கு ரொம்ப அழுகை வந்து விட்டது. அது மட்டுமில்லாமல் எனக்காக யாரும் அங்கு எதுவும் கேட்கவில்லை. எல்லோரும் அமைதியாக தான் இருந்தார்கள். ஐந்து வருடமாக இந்த இடத்தில் இருந்ததற்கு தோற்ற மாதிரி இருக்கு. இதெல்லாம் நான் கேட்க கூடாது என்று நினைத்து தான் இருந்தேன். ஆனால், என்னால் முடியவில்லை. என் உழைப்பை அந்த தொடருக்காக இத்தனை வருஷமாக கொடுத்திருக்கிறேன். மரியாதை கூட எனக்கு கிடைக்கவில்லை. மேடையில் அவர்களிடம் நான் கேட்ட கேள்வி பற்றி எதுவும் டெலிகாஸ்ட் ஆகவே இல்லை. இதுவரை போன் பண்ணி யாரும் இது குறித்து என்கிட்ட எந்த விளக்கமும் கூறவில்லை. எனக்கு ரொம்ப வலித்தது. அதனால் தான் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருந்தேன் என்று மனவேதனையுடன் மௌனிகா கூறியிருக்கிறார்.

Advertisement