தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஆர்யா. இவர், 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நடிகர் ஆர்யா அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற 16 பெண்களில் இருந்து தன்னுடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வரை அவர் அந்த பெண்களில் இருந்து யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தான் நடிகர் ஆர்யா அவர்கள் நடிகை சாய்ஷா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் ஆர்யாவிற்கு குழந்தை கூட பிறந்து இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி பல லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக இலங்கைப் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக பரவி வரும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் பாருங்க : அட, நீயா நானா கோபி அண்ணனும் விஜய் டிவியின் இந்த சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வருகிறாரா.
இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி 70 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும் பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் மறுத்ததோடு தன்னிடம் பெற்ற பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருக்கிறார் என்றும் அந்த பெண் புகார் அளித்து இருந்தார்.
இப்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்டதையடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதன் அடிப்படியில், ஆர்யா இன்று மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி புகார் தொடர்பாக விளக்கமளித்தார். விசாரணை முடிவில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.