சொல்றவன் ஆயிரம் சொல்லுவான், நான் நல்லா Gun மாதிரி தான் இருக்கேன் – கடந்த மாதம் கோவை குணா அளித்த கடைசி பேட்டி.

0
858
kovaiguna
- Advertisement -

விஜய் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான கோவை குணா காலமாகி இருக்கும் செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி 90ஸ் ரசிகர்கள் மத்தியில் பேர் ஆதரவை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை துவங்கி இருந்தார்கள். கலக்கப்போவது யாரு சீசன் 1 நிகழ்ச்சியில் ரோபோ சங்கர் மதுரை முத்து உள்ளிட்டோரம் கலந்து கொண்டார்கள்.

-விளம்பரம்-

இதில் கவுண்டமணி,ஜனகராஜ் குரலில் பேசி தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் கோவை குணா. இந்த சீசனில் இறுதி போட்டியில் ரோபோ சங்கர் மதுரை முத்து கோவை குணா ஆகிய மூவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் கோவை குணா முதல் பரிசை வென்றார். தனது அசத்திய திறமை மூலம் பல கலைஞர்களின் மனதையும் கோவை குணா சம்பாதித்தார்.

- Advertisement -

சொல்லப்போனால் பலரது மிமிக்ரி கலைஞ்சர்களுக்கு இவர் தான் முன்னோடியாக இருந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற எண்ணற்ற போட்டியாளர்களுக்கு சினிமாவிடம் வாய்ப்பு கிடைத்தது. ரோபோ சங்கர் அமுதவாணன், பழனி பட்டாளம், வடிவேல் பாலாஜி என்று பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் கோவை குணா அவர்களுக்கும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால், இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்கள் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிக்கு தூவினார்கள். அப்போதும் கோவை குணாவும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் கடந்த சில ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தெரியாமல் தான் இருந்தது.

-விளம்பரம்-

இதனால் பலரும் இவரைப் பற்றி இவரது தற்போதைய நிலை என்று பல்வேறு விதமான வீடியோக்களை பதிவிட்டு வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் தான் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்து இருந்தார் கோவை குணா. அதில் பேசிய அவர் ”நான் நலமாக தான் இருக்கிறேன். நான் நலமாக இல்லை என்றால் இப்படி Gun மாதிரி உட்கார்ந்து பேச முடியுமா ? சொல்றவன் சொல்லிக் கொண்டுதான் இருப்பான் இந்த காதுல வாங்கி இந்த காதுல விட்டு போயிட்டே இருக்கணும்.

நான் அப்போது உச்சத்தில் இருந்த நேரம் என்னை லிங்குசாமி சார் அழைத்தார், பிரபுசாலமன் சார் அழைத்தார். இவர்கள் அனைவருமே இந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு பழக்கமானவர்கள் தான் . எனக்கு மிமிக்ரியை தவிர வேறு எதுவும் தெரியாது 36 ஆண்டுகளாக அதைத்தான் செய்து வருகிறேன் .கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் நான் மிகவும் பிஸியாகி விட்டேன் சிங்கப்பூர் மலேசியா எல்லாம் திருப்பூர் பொள்ளாச்சி போய்ட்டு வர மாதிரி ஆகிடிச்சி ‘ என்று பேசி இருந்தார். மேலும் அந்த பேட்டிய இறுதியாக இது போன்ற மேடை கலைஞர்களை வாழ வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருந்தார் கோவை குணா இப்படி கடந்த மாதம் நலமுடன் இருப்பதாக பேட்டி கொடுத்த கோவை குணா தற்போது திடீரென்று மரணித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது

Advertisement