வெங்கட் பிரபுவின் மன்மத லீலை – கொரோனவுடன் நடிகைக்கு முத்தம் கொடுத்த அசோக் செல்வன். என்ன ஆச்சி அந்த நடிகைகுக்கு ?

0
799
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். பின் இவர் “சென்னை 28” படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும் அஜித்தை வைத்து இவர் எடுத்த மங்காத்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின் வெங்கட் அவர்கள் சிம்புவை வைத்து பல போராட்டங்களுக்கு பிறகு மாநாடு படத்தை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருக்கிறார். மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு கொண்ட படமாக மாநாடு படம் இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

மன்மதலீலை படம் பற்றிய தகவல்:

மேலும், மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் தனது கிடைத்த இடைவெளியில் மன்மதலீலை என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. டீசரில் அதிகம் முத்தம் கொடுக்கும் காட்சிகள் தான் இருந்தது. இதனால் சோஷியல் மீடியாவில் பலவிதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

டிரைலர் வெளியீட்டு விழா:

அதில் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, அசோக் செல்வன், ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த படத்தின் கதையை தன்னுடைய அசிஸ்டன்ட் தான் எழுதினார் என்று மிகக் குறைந்த நாட்களே இந்த படத்தின் சூட்டிங் எடுத்து முடித்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்கள். பின் விழாவில் கலந்து கொண்ட அசோக்செல்வன் இந்த படம் குறித்து மேடையில் கூறியிருப்பது, இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் நடித்துத்தர வேண்டும் என்று திட்டமிட்டு நடிக்கவில்லை.

-விளம்பரம்-

படத்தின் போது அசோக் செல்வன் செய்தது:

நல்ல கதை, இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என்று தான் நினைத்தேன். கொரோனா முதல் லாக் டவுன் முடிந்த பிறகுதான் வெங்கட் பிரபு இந்த கதையுடன் வந்தார். பிடித்திருந்ததால் உடனே நான் ஒப்புக் கொண்டேன். மேலும். ஷூட்டிங் நடக்கும்போது எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், நான் ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். அப்போது நான் நடிக்கும் போது நடிகைக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன்.

வைரலாகும் அசோக் செல்வன் பேசியது:

நல்லவேளை அவருக்கு கோரானா தொற்று ஏற்பட வில்லை. அதனால் ‘No women were harmed during the making of this film என நான் disclaimer போட சொல்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். இப்படி அசோக்செல்வன் மேடையில் பேசி இருப்பது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அசோக் செல்வன் பேசி இருப்பது குறித்து சிலர் வேடிக்கையாகவும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement