ஜாதியையே நோண்டிட்டு இருக்கமாகா ‘ஓ மை கடவுளே’ மாதிரி படம் பண்ணுங்க – ரசிகர் அட்வைசுக்கு அசோக் செல்வனின் பதில்.

0
140
- Advertisement -

அறிமுக இயக்குனர் எஸ் ஜெயக்குமார் இயக்கத்தில்சமீபத்தில் வெளியான ‘ப்ளூ ஸ்டார்; திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து இயக்குனர் கதைக்களத்தை கொடுத்திருக்கிறார். ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை குறித்து தான் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. அதோடு ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்கள் இணைந்தால் என்ன நடக்கும்? என்பதையும் இயக்குனர் படத்தில் காண்பித்திருக்கிறார். குறிப்பாக, படத்தில் காதல் காட்சிகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை இயல்பான காட்சிகளே தான் இருக்கிறது. செயற்கைத் தனமாக எந்த காட்சிகளும் இல்லை. நகைச்சுவையும் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. கோவிந்த் வசந்தனின் பின்னணி இசை கூடுதல் பலத்தை கொடுத்திருக்கிறது. மேலும், கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ள அனைவரும் ரசிக்கும் படியாக இந்த படத்தை இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.

கிரிக்கெட்டில் இருக்கும் அரசியலையும் இயக்குனர் காண்பித்து இருக்கிறார். அதுவும் பெரிதாக பாதிக்காத வகையில் கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஊர் தெரு மற்றும் காலனி தெரு மக்களிடையே ஏற்படும் அரசியல்கள், காலனி தெரு மக்களுக்கு ஏற்படும் அவமானங்களை படத்தில் தெளிவாக காண்பித்து இருக்கிறார்கள். படத்தில் இறுதியில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் படத்தினுடைய அழுத்தத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது.

-விளம்பரம்-

காலனி தெரு பையனாக அசோக் செல்வனும், ஊர் தெரு பயனாக சாந்தனுவும் நடித்திருக்கிறார்கள். இருவருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. ஜாதி பிரச்சனை மட்டும் பேசாமல் இரு ஜாதிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்று பல வருடங்களாக இருக்கும் ஜாதி பிரச்சனைக்கு ஒரு ஆரம்ப தீர்வை இந்த படத்தில் காட்டி இருந்தனர். ஆனாலும், இந்த படமும் ஜாதி படம் தான் என்று ஒரு சில விமர்சனமும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ‘ஜாதிய விட்டு கொஞ்சம் வெளிய வந்து தொலைங்கபா… அது தானா மாறுது, சும்மா அதையே நோண்டிட்டு இருக்காதீங்க. ஓ மை கடவுளே’ மாதிரி படம் பண்ணுங்க என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த அசோக் செல்வன் ‘ ஓ மை கடவுளே படத்தை பார்த்ததற்கு நன்றி. ஆனால், இப்படி யூகம் செய்யும் முன்னாள் நீங்கள் படத்தை பார்க்க வேண்டும் என்று நான் சிபாரிசு செய்கிறேன். இந்த உலகத்தின் அமைதிக்கு ஒற்றுமை தான் ஒரே வழி. நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement