கோபிநாத் சார் இத மறச்சிட்டாரு – பார ஒலிம்பிக் வீரர்கள் சொன்ன உண்மை.

0
130
- Advertisement -

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கோபிநாத் செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு கோபிநாத் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவருடைய சரளமான மக்கள் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட்.

-விளம்பரம்-
gopinath

கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி:

“நீயா நானா” நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் தான் கோபிநாத் அவர்கள் சினிமாவில் காலடி வைத்தார். பின் இவர் வாமனன், தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நீயா நானா கோபிநாத் அவர்கள் பல பேருக்கு உதவி செய்து இருக்கிறார். அது அதுமட்டுமில்லாமல் இவர் சமூக ஆர்வலராகவும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்து கொண்டு வருகிறார்

கோபிநாத்திற்கு பாராட்டு விழா :

இந்நிலையில் பிரபல சேனல் ஒன்றில் கோபிநாத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவில் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் கலந்து கொண்ட மாற்று திறனாளி வீரர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது யாரும் எதிர்பாரத ஒன்று என்று சொல்லலாம். அதோட அந்த மாற்றத்திறனாளி வீரர்களுக்கு கோபிநாத் செய்த உதவிகள் எல்லாம் சொல்லி இருக்கிறார்கள். இது அங்கிருந்தவர்களுக்கு மட்டும் இல்லாமல் அனைவருக்குமே அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது.

-விளம்பரம்-

கோபிநாத் செய்த செயல்:

மேலும், நிகழ்ச்சியில் கோபிநாத் செய்த உதவிகள் குறித்து மாற்றுத்திறனாளி வீரர்கள் சொன்னது, எங்களுக்கு ஆரம்பத்தில் நிறைய உதவி தேவைப்பட்டபோது கோபிநாத் இடம் நாங்கள் கேட்டோம். உடனே அவர் விளையாட்டுக்கு என்றால் என்னால் முடிந்த ஒரு உதவிகளை செய்வேன் என்று சொல்லி பெரிய அளவில் உதவி செய்தார். அதோடு பல பேரிடம் கேட்டு உதவிகளையும் எங்களுக்கு செய்திருந்தார். அதனால்தான் எங்களால் பாரா ஒலிம்பிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்தது.

கோபிநாத்துக்கு குவியும் பாராட்டு:

கோபிநாத் தங்களது செய்த உதவியை வெளியே சொல்ல கூடாது என்று சொல்லியும் இருந்தார். இருந்தாலும் நாங்கள் சொல்லிவிட்டோம் என்று கூறியிருக்கிறார்கள். பின் அவர்கள் அங்கு வாங்கிய எல்லா மெடல்களையும் கோபிநாத் கையில் கொடுத்து அதை தங்களுடைய கழுத்தில் போட சொல்லி சொன்னார்கள். கோபிநாத் சந்தோசமாக அனைவருக்கும் மெடலை போட்டு இருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் கோபிநாத்தின் செயலை பாராட்டி வருகிறார்கள்.

Advertisement