தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிய அசின். என்ன இப்படி வளர்ந்துட்டாரு அசின் மகள்.

0
90587
asin
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருந்த பல்வேறு நடிகைகள் தற்போது திருணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டனர். அந்த வகையில் பல இளசுகளின் கனவுக் கன்னியாக இருந்த அசினும் ஒருவர். தமிழ் சினிமா மலையாளத்தில் இருந்து பல்வேறு நடிகைகளை இறக்குமதி செய்துள்ளது, அப்படி வந்த நடிகைகளில் நடிகை அசின் மிகவும் தரமான நடிகை என்று கூட சொல்லலாம். மலையாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ‘நரேந்திரன் மக்கன் ஜெயகாந்தன் வக்கா ‘ என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார் நடிகை அசின்.

-விளம்பரம்-

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஷாம் மற்றும் விஷால் நடித்த ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஷாம் ஜோடியாக அறிமுமானார். அதன் பின்னர் சூர்யாவுடன் கஜினி, விஜயுடன் சிவாகாசி, போக்கிரி, காவலன் அஜித்துடன் வரலாறு, கமலுடன் தசாவதாரம் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் தனது நடிப்பினை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். ஆனால், பாலிவுட்டில் இவரால் ரொம்ப நாட்கள் நிலைத்து நிற்க முடியவில்லை. பொதுவாக பாலிவுட் பக்கம் சென்று வந்தாலே தமிழ் நடிகைகளுக்கு மார்க்கட் குறைவது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதே கதை தான் அசினுக்கும் நேர்ந்தது தமிழில் அசின் நடித்த கஜினி திரைப்படம் இந்தியில் அமீர் கான் நடிப்பில் வெளியானது. அந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதன் பின்னர் தொடர்ந்து இந்தி படத்தில் கவனம் செலுத்தி வந்தார் அசின்.

-விளம்பரம்-

ஆனால், அந்த படங்கள் அனைத்தும் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் அசினுக்கு இந்தியில் மார்க்கட் தமிழில் மீண்டும் நுழைய முயன்றார் அதன் பின்னர் தமிழும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சினிமாவில் நடிப்பதையே விட்டுவிட்டார் அசின். பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். மேலும், நடிப்பிற்கு முழுக்கு போட்டுவிட்டு தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டிலேயே இருக்கிறார் அசின். திருமணமா ஒரே ஆண்டில் நடிகை அசினுக்கு ஆரின் என்ற பின் குழந்தையும பிறந்தது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது அசின் தனது மகள் ஓணம் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் அசின் மகள் அச்சு அசலாக நாஸ்ரியாவை போலவே இருக்கிறார் என்று கமன்ட் செய்து வந்தனர். நிலையில் அசின் தனது மகளின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அசின் மகளா இவ்வளவு வளர்ந்துவிட்டார் வியப்படைந்துள்ளனர்.

Advertisement