அட அசுரன் அம்மு அபிராமியா இது. 10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்திருக்கார் பாருங்க.

0
44099
ammu-abhirami

தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாக பல்வேறு இளம் நடிகைகள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிறு வயதிலேயே தனது நடிப்புத்திறன் மூலம் அனைவரையும் வியக்க வைத்து வருபவர் நடிகை அம்மு அபிராமி. 19 வயதேயான இந்த இளம் நடிகை சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தில் அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படம் தான். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இதையும் பாருங்க : அங்க சுத்தி இங்க சுத்தி அஜித்தை குறி வைத்த ஸ்ரீரெட்டி. என்ன கூறியுள்ளார் பாருங்க.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி.தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும், ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தார்.

தற்போது ‘யார் இவர்கள்’ என்ற படத்திலும், ஜித்து ஜோசப் தயாரிப்பில் வெளியாக இருக்கும் பெயரிடபடாத படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் இவரை மேலும் சில படங்களில் கதாநாயகியாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மு அபிராமி, தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவரது புகைப்பட தொகுப்புகளில் இருந்து 10 வருடத்திற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement