அங்க சுத்தி இங்க சுத்தி அஜித்தை குறி வைத்த ஸ்ரீரெட்டி. என்ன கூறியுள்ளார் பாருங்க.

0
117833
srireddy

சினிமா திரை உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது அவர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் நடிகை ஸ்ரீ ரெட்டி அவர்கள் தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் மீது பாலியல் புகார் செய்தது தெலுங்கு திரை உலகையே பீதியை கிளப்பி விட்டது. ஸ்ரீ ரெட்டி அவர்கள் பட வாய்ப்புகளுக்காக சினிமா பிரபலங்களிடம் தன்னையே இழந்துள்ளதாக வெளிப்படையாக பேட்டி அளித்தது மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள்.

Image result for srireddy ajith"

தற்போது தான் இந்த ரெட்டி லீக்ஸ் அமைதியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இவர் நேர்காணல் ஒன்றில் கூறியது, டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் அதற்காக தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறிருந்தார். அப்போ தெலுங்கு மாநிலம் இப்போ தமிழக மாநிலமா!! பிரபலங்கள் நிலை என்ன ஆகப்போகுதோ? என நெட்டிசன்கள் விமர்சித்தும் வந்திருந்தார்கள். மேலும், அவர் இது குறித்து பேட்டியில் கூறியது. எனக்கு இனிமேல் கவர்ச்சிப் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. இதனால் ஏற்கனவே என்னுடைய வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தது. இனிமேலாவது நான் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடையே நல்ல பேரை வாங்க வேண்டும் என்றும் நான் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்க ஆசைப்படுகிறேன். அதுமட்டுமில்லாமல் போலீஸ், வில்லி என படங்களில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தாலும் நடிக்க தயார் என்றும் அறிவித்திருந்தார்.

இதையும் பாருங்க : மேலாடையில்லாமல் ரோஜா குளியல் போட்ட அமலா பால். ஆடிப்போன ரசிகர்கள்.

- Advertisement -

அப்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. திரை உலகில் நீங்கள் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது யாருக்கு கொடுப்பீர்கள் என ஸ்ரீரெட்டி இடம் பார்த்து கேள்வி கேட்டார்கள். அதற்கு ஸ்ரீரெட்டி அவர்கள் சற்றும் யோசிக்காமல் எந்த ஒரு காம உணர்வும் இல்லாமல் அன்பின், பாசம் வெளிப்பாடான ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் நான் அதை “அல்டிமேட் ஸ்டார் தல அஜித்துக்கு” தான் கொடுப்பேன். காரணம் என்னவென்று கேட்டால் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படம் தான். ஏனென்றால் அந்தப் படம் அந்த அளவிற்கு அற்புதமான நிஜ வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டியது. மேலும், அந்த படத்தில் வந்த மூன்று பெண்களின் நிலை அனைத்தையும் நான் என் வாழ்க்கையில் அனுபவித்து உள்ளேன்.

Image result for srireddy ajith"

என்னுடைய வாழ்க்கையில் நடந்தது தான் அவர்கள் இயக்குனர் வினோத் படமாக்கி உள்ளார். மேலும், அந்த படத்தில் அஜித்தின் சண்டை காட்சிகள், அவருடைய எக்ஸ்பிரஷன், அதிரடியான பேச்சு அனைத்தும் என்னை கவர வைத்தது. அதுமட்டுமில்லாமல் சினிமா துறையில் நடிப்பில் ஜாம்பவான் என்பதை நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் தல அஜித் அவர்கள் நிரூபித்துவிட்டார். என்னைக் கேட்டால் ‘லெஜெண்ட்’ விருதை நடிகர் அஜித்துக்கு தான் வழங்குவேன். மேலும் அவருடைய கால்களில் விழுந்து வணங்குவேன் என்றும் மனம் திறந்து பேசினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

Advertisement