சாப்பிடாமல் தவம் இருந்தேன். அசுரன் படத்தின் முதல் நாள் ஷூட்ங்கின் போது எடுப்பட்ட வீடியோவை வெளியிட்ட அம்மு அபிராமி.

0
4050
ammu-abhirami
- Advertisement -

ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் இளம் நடிகையான அம்மு அபிராமி. இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். நடிகை அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது “ராட்சசன்” படத்தில் தான். தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் என்று பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் தனுஷின் பிளாஷ் பேக் காட்சியில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு நிகராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நடிகை அம்மு அபிராமி.

இதையும் பாருங்க : படுக்கைக்கு அழைத்த நபர். ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய புலி பட நடிகை.

- Advertisement -

இந்த நிலையில் அசுரன் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட முதல் நாளுக்கு முன்பாக எடுத்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேசிய அம்மு அபிராமி, அசுரன் படத்தின் வாய்ப்பிற்காக தவம் இருந்து, சாப்பிடாமல் உடல் எடையை எல்லாம் குறைத்துளேன் என்று கூறியுள்ளார். இத்தனை நாள் கழித்து அம்மு அபிராமி இந்த விடியோவை வெளியிட்டதற்கு முக்கிய காரணமே அசுரன் படம் 100 நாட்களை கடந்து விட்டது என்பதால் தான்.

Image result for asuran ammu abhirami

-விளம்பரம்-

தற்போது நடிகை அபிராமி அவர்கள் தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்து வெளிவந்த “தம்பி” படத்திலும் நடித்திருந்தார். இயக்குனர் ரமேஷ் ஜி இயக்கும் படம் “அடவி”. இந்த படத்தில் நான் மகான் அல்ல படத்தின் புகழ் வருண் கிஷோர் அவர்கள் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தான் நடிகை அம்மு அபிராமி நடிக்கிறார். இந்த படத்தில் அம்மு அபிராமி காட்டு வாசி பெண்ணாக நடிக்கிறார் என்பது குறிப்பித்தக்கது.

Advertisement