புதுப்பேட்டை அசுரன் பட நடிகர் கொரோனாவால் மரணம் – செல்வராகவன் போட்ட வித்யாசமான இரங்கல் பதிவு.

0
1069
nithesh
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

-விளம்பரம்-

அதே போல தமிழ் சினிமாவில் சூர்யா, விஷால், அதர்வா, ஆண்ட்ரியா, சரத் குமார், சுந்தர் சி என்று பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமாகினார். அதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்டு பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்தனர் .சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : இயக்குனரும் சிவகார்த்திகேயனின் உயிர் நண்பருமான அருண் ராஜாவின் மனைவி கொரோனாவில் மரணம்.

- Advertisement -

முதல் அலையை விட இரண்டாம் அலையில் தான் பல்வேறு சினிமா பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் நிதீஷ் வீரா கொரோனாவால் காலமாகியுள்ள சம்பவம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் நிதீஷ் வீரா வல்லரசு படத்தில் அறிமுகமானார்

புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிதித்துள்ளார். இறுதியாக இவர் விஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தில் நடித்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்று காரணமாக காலமாகியுள்ளார் இவரது இறப்பிற்கு செல்வராகவன் இவர் நடித்த புதுப்பேட்டை படத்தின் புகைப்படத்தை பதிவிட்டு ‘RIP என்னுடைய மணி ‘என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement