அசுரன் – திரை விமர்சனம்.!

0
3881
asuran

ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களுக்கு அடுத்து தனுஷ்– வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய படம் தான் “அசுரன்”.அழுத்தமான திரைக்களம், ஆழமான கதைகளைக் கொண்டு எதார்த்தமான படைப்புகளை தமிழ் சினிமா உலகில் வழங்கி வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர்,பிரகாஷ்ராஜ்,பசுபதி,பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படம் பூமணி எழுதிய “வெக்கை” என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கிய படமாகும். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் அவர்கள் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்குப் பிறகு தனுஷும் ஜி.வியும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள்.சரிங்க வாங்க போய் அசுரன் படத்தை பற்றி பாக்கலாம்.

Image

கதைக்களம்:

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இந்த அசுரன் படக்கதை 80களில் ஆரம்பித்து 60க்கு பயணித்து சென்று மீண்டும் 80களிலேயே முடியும் கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த படத்தில் ஜாதி மோதல், குடும்பத்தை பழிக்குப்பழி, காதல் என அழகாக கதையை கொடுத்துள்ளார். இந்த படத்தில் நரேன் குடும்பத்திற்கும், சிவசாமி (தனுஷ்) குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து கொண்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் 40 வயதிற்கு மேற்பட்ட சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷ் மனைவியாக மஞ்சு வாரியர், திருமண வயதில் இருக்கும் மூத்த மகன் முருகன் (அருணாசலம்), பள்ளிக்குச் செல்லும் இளைய மகன் (கென்), சிறு மகள் மச்சான் பசுபதி என அழகான கிராமத்து பாங்கில் கதையை கொண்டு போய் உள்ளார் இயக்குனர்.

தன் குடும்பத்திற்காக எதையும் செய்யத் துடிக்கும் கதாபாத்திரத்தின் தனுஷ் நடித்துள்ளார். தனுஷ் மகன்கள் இளம் துடிப்போடும், ஆவேசத்துடன் இருப்பவர்கள். அவர்களை அடக்கி வைப்பது தான் தந்தையான சிவகாமியின் வேலையாகும்.அதிகார வர்கத்தின் அடையாளமாக வில்லன் நரேன் நடித்துள்ளார்.நரேன் தன்னுடைய மகனை அடித்த தனுஷின் முத்த மகனை(அருணாசலம் ) ஊரில் உள்ள அனைவரிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறுகிறார். அப்படியும் செய்து தன்னுடைய மகனை மீட்டு வருகிறார் சிவசாமி. ஆனால் அருணாசலத்திற்கு கோபம் தாங்க முடியாமல் நரேனை செருப்பால் அடித்து விடுகிறார். இந்த அவமானம் தாங்க முடியாமல் நரேன் அடியாட்கள் வைத்து அருணாச்சலத்தை கொள்கிறார்.மேலும், மீதமுள்ள குடும்பத்தையும் எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என ஓடி ஒழிகிறார். இப்படி ஓடி ஓடி ஒழிந்து மறையும் தனுஷ் அசுரனாக மாறுவது மீதி கதை. சிவசாமி எப்படி தன் குடும்பத்திற்காக அசுர வேட்டையில் இறங்குகிறார் என்பதுதான் இந்த படத்தின் சுவாரசியம்.

-விளம்பரம்-
Image

படத்தில் தனுஷ் ரொம்ப அமைதியா இருக்கிறாரே என்று நினைக்கும் நேரத்தில் தன் மகனை காப்பாற்ற அசுர அவதாரம் எடுக்கும் காட்சி தியேட்டர்களில் பட்டையை கிளப்பியது. சும்மா வெறித்தனமாக அசுர வேட்டை ஆடினார் தனுஷ். மேலும், தனுஷை ஹீரோவாக பார்த்து இந்த படத்தில் நடுத்தர வயது கதாபாத்திரத்தில் பார்க்கும்போது தனுஷின் நடிப்பு பாராட்டத்தக்க வகையில் உள்ளது. அப்படியே கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று கூட சொல்லலாம். மேலும் நெல்லை தமிழ் பேச்சைக் கூட சரளமாக பேசினார்.பொதுவாக சினிமா திரை உலகில் நாவலை படமாக்கினால் எப்போதுமே பேரும் புகழும் அதிகம் கிடைக்காது என்ற சென்டிமெண்ட் ஆண்டாண்டு காலமாக இருந்து கொண்டு வருகிறது.

அதை உடைத்தெறிந்தது இந்த அசுரன் படம். கல்வியை மட்டுமே இந்த உலகத்தில் யாரிடமிருந்தும் யாரும் பறிக்க முடியாது என்ற அற்புதமான விஷயத்தை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர். இந்த உலகில் அழியாத சொத்து கல்வி என்பதை நிரூபித்துவிட்டார்.ஜிவி பிரகாஷின் ‘கத்தரிப்பு பூவழகி’ என்ற பாடல் பாலைவனத்தில் மழை பெய்தால் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கு இனிமையாக இருந்தது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ஒரு நாவலை எப்படி சிறந்த திரைக்கதை ஆக மாற்றும் என்ற சூத்திரத்தை இந்த படத்தில் உபயோகித்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். சின்ன வயசுல எப்படி இருந்தார்? தன் குடும்பத்தை எப்படி வில்லன்களிடமிருந்து காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதிக்கதை. எல்லாம் தாண்டி தன் இடத்தை எப்படி தக்க வைத்துக் கொள்கிறார் என்பதுதான் ஹைலைட்.

Image

பிளஸ்:

ஒரு நாவலை திரைக்கதையாக எடுத்து சினிமா திரையுலகில் சாதனை புரிவது ரொம்ப கடினமான விஷயம், அதை நிரூபித்து விட்டார் இயக்குனர் வெற்றிமாறன்.

இந்த படம் தேசிய விருது மற்றும் ஆஸ்கார் விருது வாங்குவதற்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் நடிப்பு வேற லெவல் வெறித்தனமாக இருந்தது.

ஜீவி பிரகாஷின் இசை ராமரின் எடிட்டிங் இந்த படத்தின் வெற்றிக்கு பெரிய பங்கு வகிக்கிறது.

இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடித்துள்ளார்கள்.

இறுதி அலசல்:

இந்த படத்தின் இறுதியில் காட்டப்படும் காட்சி இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு அவசியமான ஒன்றாகும். எல்லாரிடமும் இருந்து எல்லாத்தையும் வாங்கி கொள்ளலாம் ஆனால், ஒருவரின் அறிவை என்றும் திருட முடியாது என்று கூறினார். அந்த டயலாக் மூலம் தெறிக்க விட்டார் என கூட சொல்லலாம். மொத்தத்தில் அசுரன் வெறித்தனமான அசுர வேட்டை ஆகும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement