அசுரன் படம் எப்படி இருக்கு .! சுட சுட ட்விட்டர் விமர்சனம் இதோ.!

0
5154
asuran
- Advertisement -

தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். செல்வராகவனின் இயக்கத்தில் வெளி வந்த ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையைகண்டேன்,ஆடுகளம், மாரி ஆகிய பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.இதனாலே தனுஷின் நடிப்பு திறமைக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது கூட சொல்லலாம். அந்த அளவுக்கு சினிமா உலகில் மாஸ் காட்டுகிறார்.தனுஷின் ஒட்டுமொத்த குடும்பமே கலைக் குடும்பம் என்று கூடச் சொல்லலாம்.

-விளம்பரம்-

தனுஷ் தமிழ் திரை உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார்.அழுத்தமான திரைக்களம், ஆழமான கதைகளைக் கொண்டு எதார்த்தமான படைப்புகளை தமிழ் சினிமா உலகில் வழங்கி வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் தான் இயக்குனர் வெற்றிமாறன்.இவருடைய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட்டாக உள்ளது. கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பிலும், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து உருவாகி வந்த படம் தான் “அசுரன்”.

- Advertisement -

வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ்- வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய படம் ஆகும். இந்த படம் “வெட்கை” என்ற நாவலின் அடிப்படையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து உள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பசுபதி,பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இன்று அசுரன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும்,அசுரன் படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.ரசிகர்கள் கூறியது, தனுஷ் இந்த படத்தில் வேற லெவல்ல நடித்திருக்கிறார் என்றும் கூறினார்கள். இந்த படத்தில் அவருடைய நடிப்பு பற்றி சொல்ல வார்த்தையே இல்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த அசுரன் படம் கண்டிப்பாக தேசிய விருது வாங்கும் என்று கூறினார்கள். படத்தில் சிறப்பான சம்பவம் உள்ளது என்றும்,தனுஷும்- வெற்றிமாறனும் தெறிக்க விட்டாங்க என்று ரசிகர்கள் கூறினார்கள். இந்த படத்தில் தனுஷ் வேற லெவல்ல நடித்திருக்கிறார் என்றும், ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது கூட கொடுக்கலாம் என்றும் ஒரு சில பேர் கூறிவருகின்றனர். அவருடைய முகபாவங்கள், அவருடைய நடிப்பு திறமை அனைவரையும் கலங்க வைக்கும் அளவிற்கு இருந்தது.தனுஷை நடிப்பின் அரக்கன் என்றும் கூட சொல்லலாம்.இந்த வருடம் தனுஷின் பிளாக் பஸ்டர் படமாக அசுரன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசுரன் வெறித்தனமாக இருக்கிறது என்றும் கூறினார்கள்.மேலும் இந்த படம் குறித்து ரசிகர்கள் எக்கச்சக்கமான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங்களில் குவித்துக் கொண்டு வருகின்றனர். இந்த படத்தில் தனுஷ் அவர்கள் அசுரன் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று கூட சொல்லலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement