வாத்தி கம்மிங் பாடலின் ட்ரேட் மார்க் ஸ்டெப்பை சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய இந்திய வீரர். வைரலாகும் வீடியோ.

0
2328
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அவ்வளவு ஏன் இந்த பாடலுக்கு தான் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் நடனம் ஆடி இருந்தார். அதேபோல திரை அரங்கிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : கைதி படத்தில் நடித்துள்ள புகழ் – இது நாள் வரை இது உங்களுக்கு தெரியுமா ? இதோ அந்த காட்சி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் வாத்தி கம்மிங் பாடலின் ட்ரேட் மார்க் ஸ்டெப்பை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டியில் போட்டு அசத்தி உள்ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 329 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 134 ரன்களை மட்டுமே குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் சதம் மூலமாக இந்திய அணி 286 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்து அணி 482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் விளையாடி 318 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றுள்ளார். ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் அஸ்வின் சாதனையை கொண்டாடி வருகின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழ்ந்தார். இந்நிலையில் அஸ்வின் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்த போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு விஜய் வெளிப்படுத்திய நடன அசைவை செய்திருப்பதைப் பார்த்த நெட்டிசன்கள் அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே, வாத்தி கம்மிங் பாடலின் இந்த ட்ரேட் மார்க் வீடியோவை அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement