ஆபாச படமா ? அப்போது மட்டும் பார்ப்பேன். அதுல்யா அளித்த ஷாக்கிங் பதில்.

0
47261
athulya
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே’ படத்தில் கண்களால் காதல் செய்து நமக்கு அறிமுகமானவர். இவருக்கு சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஆர்மிகளும் பல உள்ளது. இப்படி கிடைத்த பிரபலம் மூலம் இவருக்கு சினிமாவில் அடுத்தடுத்தது வாய்ப்பும் கிடைத்தது. மேலும், இவர் பிரபல நடிகையான அஞ்சலியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. `நாடோடிகள் 2′ தற்போது `அடுத்த சாட்டை’ என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

-விளம்பரம்-
athulya

காதல் கண் கட்டுதே படத்திற்கு பின்னர் இவர் ஏமாளி என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடித்த ‘ஏமாளி ‘டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்தபடத்தில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து எங்களுக்கு உங்கள் குடும்ப பாங்கான லுக் தான் பிடிக்கும் அதனால் இப்படியெல்லாம் நடிக்காதீர்கள் என்று தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

இதையும் பாருங்க : பர்ஸ்ட் லுக் மட்டும் வந்து நின்றுபோன ரஜினியின் படம். புகைப்படத்துடன் இதோ.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இவர் ஜெய் நடிப்பில் வெளியான ‘கேப்மாரி’ படத்திலும் நடித்திருந்தார். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெய், வைபவி, சித்தார்த் விபின், சத்யன் எனப் பலர் நடித்துள்ளனர் இந்த படத்தில் இவருக்கும் ஜெய்க்கும் இருந்த முத்த காட்சிகளில் பல முறை ரீ டேக் கூட வாங்கியதாக கூறியிருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவரிடம்திருமணத்திற்கு முன் பெண்கள் உறவு வைப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அதுல்யா, தற்போது உள்ள காலகட்டத்தில் லிவ்விங் ரிலேஷன்ஸ் இருக்கும் தலைமுறையில் பலருக்கு ஏற்றவாறு இது மாறுபடும். ஆனால், என்னை பொறுத்த வரை திருமணத்திற்கு பின் தான் உடல் உறவு என்று கூறியுள்ளார். மேலும், ஆபாச படம் பார்ப்பீர்களா என்று கேட்டதற்கு நான் உண்மையாக அந்த படத்தினை பார்த்ததில்லை. எப்பவாவது இன்ஸ்டா, டுவிட்டரில் ஏதாவது காட்சி வரும்போது பார்ப்பது தான் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement