பர்ஸ்ட் லுக் மட்டும் வந்து நின்றுபோன ரஜினியின் படம். புகைப்படத்துடன் இதோ.

0
25120
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அன்றும் இன்றும் என்றும் அவருடைய ஸ்டைலுக்கும் நடிப்புக்கும் எவரும் நிகரில்லை என்று சொல்லலாம். அதனாலேயே தான் இவர் இன்று வரை சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்த எல்லா படமுமே வேற லெவல். அது மட்டுமில்லாமல் ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்புக்கும், ஸ்டைலுக்கும் என ஒரு தனி பட்டாளம் உள்ளது. தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் 90 கால கட்டங்களில் இருக்கும் போது அவருக்கு என இருந்த ரசிகர்கள் பட்டாளம் தற்போது வரை குறையாமல் கூடிக்கொண்டே தான் போகிறது.

-விளம்பரம்-
jilla-collector-01

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் எப்போதுமே பிரபலமான இயக்குனர்கள், அறிமுக இயக்குனர்கள் என பார்க்க மாட்டார் யாராக இருந்தாலும் அவர்களிடம் கதைகள் கேட்பார். பின் கதை நன்றாக இருந்தால் ஓகே சொல்லி படத்தில் நடிப்பார். அப்போது ரஜினிகாந்த் அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலம். அந்த வகையில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளி வந்த ‘சின்னக்கவுண்டர்’ படத்தை இயக்கியவர் ஆர்.பி. உதயகுமார். இயக்குனர் ஆர்.பி. உதயகுமாரை அழைத்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கதை கேட்டார். ஆனால், இயக்குனர் உதயகுமார் அப்போது தான் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் அதுக்கு முன்னாடி உரிமை கீதம், கிழக்கு வாசல் போன்ற படங்களை இயக்கியிருந்தாலும் சின்னக்கவுண்டர் படத்தின் மூலம் தான் மக்களிடையே பிரபலமானர்.

இதையும் பாருங்க : சாணியடிப்பேன் என்று கூறிவிட்டு கமலை நேரில் சந்தித்த லாரன்ஸ். வைரலாகும் புகைப்படம்.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்திற்கு பின்னர் தான் உதயகுமார் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது என்று சொல்லலாம். மேலும், உதயகுமார் அவர்கள் ரஜினியிடம் யாருடைய ஸ்டைலில் படம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு ரஜினி அவர்கள் என்னுடைய ஸ்டைலில் படம் தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், அந்த படத்திற்கு ஜில்லா கலெக்டர் என பெயரும் வைத்தார்கள். அதோடு அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வார இதழ்களில் வெளி வந்தது. ஆனால், என்னவோ தெரியவில்லை அந்த படத்தை அப்படியே நிறுத்தி விட்டார்கள். அந்த படத்தின் போது இயக்குனர் என்ன நினைத்தாரோ என்று இப்போது வரை தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் அந்த ஜில்லா கலெக்டர் இன் பஸ்ட் லூக் போஸ்டர் பயங்கரமாக வேற லெவல்ல இருந்தது.

-விளம்பரம்-
jilla-collector

மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அந்த படத்தில் ரஜினி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வந்தது. பின் அந்தப் படம் கைவிடப்பட்டது என தெரிந்தவுடன் அதே தேதியில் எஜமான் படத்தை எடுத்தார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எஜமான் படம் எதிர்பார்த்த அளவை விட மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், எல்லா படங்களை விட ஜில்லா கலெக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இன்று வரை இயக்குனர் உதயகுமார் அவர்கள் அந்த கதையை வேறு யாரிடமும் சொல்லவில்லை என்பது தான் உண்மை. அதுமட்டுமில்லாமல் ரஜினியை தவிர அந்த கதை வேறு யாருக்கும் பொருந்தாது எனவும், அந்த கதாபாத்திரம் அவருக்காகவே உருவாக்கியது எனவும் கூறியுள்ளார்.

Advertisement